எல்ஜி பொடி..வைகோ பட்டணம் பொடி
தஞ்சாவூர்:
மதிமுகவுக்குள் புகைந்து கொண்டிருக்கும் கூட்டணி விவகாரம் மெல்ல வெடிக்கத் தொடங்கியுள்ளது.
கட்சியில் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியைத் தொடர வேண்டும் என்றும் இன்னொரு தரப்பு அதிமுகவுடன் கூட்டணிஅமைக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். இதில் எந்த தீர்க்கமான முடிவையும் வைகோ இதுவரை எடுக்கவில்லை. திமுக எத்தனைஇடங்களைத் தருகிறது என்பதை வைத்து தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கவுள்ளார் வைகோ.இதனால் திமுகவுக்கு எதிராகவோ அதிமுகவுக்கு எதிராகவோ பேச வேண்டாம் என கட்சியினக்கு தடை போட்டுள்ளார்.
இந் நிலையில் தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவைத் தலைவர்எல்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் எல்.கணேசன் பேசுகையில்,
குடும்பம் என்றால் தலைவி மட்டும் தான். தலைவர் கிடையாது. மனை என்றால் வீடு. அதனால் தான் மனைவி என்கிறார்கள்.எனவே குடும்பத்தில் மனைவியை ராணியாக அங்கீகரித்து, அவரிடம் பொறுப்பை கொடுத்து விட வேண்டும்.
கணவன் வெளியில் தான் ராஜாவாக இருக்க வேண்டும். வீட்டுக்கு வந்து விட்டால் எலியாக மாறி விடவேண்டும். தமிழனுக்குதலைவி தான் உண்டு, தலைவர் இல்லை என்று பொடி வைத்துப் பேசினார்.
அதாவது கட்சியில் முக்கிய முடிவுகளை வைகோ மட்டுமே எடுக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பேசினார்கணேசன்.
இதைத் தொடர்ந்து பேசிய வைகோ நேரடியாக எல்.ஜிக்கு பதில் சொல்லாமல், பட்டணம் பொடி வைத்து பேசினார்.
சோழ மண்டலத்தில் இருந்த கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்புறவுகொண்டிருந்தனர். அப்படிப்பட்ட நட்புக்கு பெயர் போன ஊர் தஞ்சாவூர்.
தமிழக கிராம மக்களின் நிலை வேதனையடையச் செய்துள்ளது. பஞ்சம் பிழைக்க அடுத்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை போக்க நதிகளை இணைக்க வேண்டும் என கூறி வருகிறோம். வீரம் என்பது தேவைப்படும்போது தேவை. தன்மானத்தைகாப்பாற்ற வீரம் தேவை என்றார்.
கட்சியின் கெளரவம் பாதிக்கப்படாத வகையில் கூட்டணியில் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என வைகோ கூறிவருவது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தன்மானம் பாதிக்கப்பட்டால் வீரத்தோடு சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும்என்பதையே வைகோ இவ்வாறு குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
பொடி வச்சு வச்சு.. தும்ம வைக்கிறீங்களே அய்யா..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications