கூட்டணி அறிவிப்பு: ஜெ வீசும் பிரம்மாஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது,திட்டமிட்ட சதி, இதன் மூலம் திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்த அவர் முயலுகிறார் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக கூட்டணிக்குத் தயாராகவேஉள்ளது, அதிமுகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அறிவித்தார். அதற்கு முன்பாக நடந்த மதிமுக கூட்டம் ஒன்றில்பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்று பேசியிருந்தார்.

ஏற்கனவே தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணியில் நிலவி வரும் ஊடல்களை கணக்கில் கொண்டு, மதிமுகஅதிமுகவுடன் கூட்டணி சேருமோ என்ற பேச்சு பலமாக கிளம்பியது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,நிச்சயம் கூட்டணி அமையும் என்று ஆணித்தரமாக ஜெயலலிதா பேசினார். இதனால் மதிமுக மீதான சந்தேகம் மேலும்வலுவடைந்துள்ளது.

இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் கருணாநிதி உடனடியாக பேச்சுவார்த்தைநடத்துவதே நல்லது, அப்போது தான் இதுபோன்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் வருகிற 8ம் தேதியன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார் கருணாநிதி.இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும், கூட்டணிக் கட்சிகள் குறித்து வெளியாகும் செய்திகள் குறித்தும் முக்கியமாகவிவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, சில கட்சிகளுடன் பேச்சு நடந்து வருவதாக ஜெயலலிதா கூறுவது சுத்தப் பொய் என்று திமுக தலைவர்களிடையேஒரு கருத்து நிலவுகிறது. இப்படிக் கூறுவதன் மூலம் மதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதை வெளியே இழுக்க ஜெயலலிதாமுயலுகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஒரு வருடமாகவே பாமகவை திமுக கூட்டணியிலிருந்து வெளியே இழுக்க அதிமுக தீவிரமாக முயற்சித்து வந்தது.ஆனால் அது நடக்கவில்லை. இதனால் கடுப்பாகிப் போன அதிமுக, இப்போது மதிமுகவைக் குறிவைத்துள்ளது.

மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவது போன்ற மாயையை ஏற்படுத்தி அதன் மூலம் திமுக அணியிலிருந்துமதிமுகவைப் பிரித்து விட அதிமுக தலைமை திட்டமிட்டு அதை செயல்படுத்தி வருகிறது. சில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறதுஎன்பதும் கூட அந்த சதி திட்டத்தில் ஒன்று தான். உண்மையில் யாருடனும், அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் உண்மையாகி விடும் என்ற அடிப்படையில் தான் திரும்பத் திரும்ப ஜெயலலிதாபொய் சொல்லி வருகிறார். இதை திமுக கூட்டணிக் கட்சியினர் யாரும் நம்பக் கூடாது. ஆனால் நம்பி ஏமாந்து போய் திமுககூட்டணி உடையும் என்ற நினைப்பில் தான் அதிமுகவினர் உள்ளனர்.

இதையெல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்பது கலைஞருக்கு நன்றாகவேத் தெரியும். எத்தனையோ பெரியபிரச்சினைகளை மிகவும் லாவகமாக சந்தித்து தீர்வு கண்ட அனுபவம் கொண்ட பழுத்த அரசியல்வாதி அவர். எனவே இந்தப்பிரச்சினையையும் அவர் சுலபமாக சமாளித்து விடுவார் திமுகவினர் கூறுகிறார்கள்.

இதன் அடிப்படையில் தான் அதிமுகவுடன் கூட்டணி சேர மதிமுக மாவட்டச் செயலாளர்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதைஉணர்ந்த கருணாநிதி, வைகோவை உடனடியாக அழைத்து சேர்ந்து இருந்தால் தான் நல்லது, சீட் பிரச்சினை பெரிதல்ல, வெறும்நம்பருக்காக பிரிய வேண்டுமா, அணி மாற வேண்டுமா என்று கேட்டு அவரை ஆஃப் செய்து விட்டார் என்றும் திமுகவினர்கூறுகிறார்கள்.

மேலும் தற்போது 8ம் தேதி கூட்டியுள்ள கூட்டத்திலும் ஆளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பூர்வாங்கமாக,அதிகாரப்பூர்வமாக பேசி முடிவு செய்து விடவும் கருணாநிதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி நிலைக்குமா, மதிமுக நீடிக்குமா என்பது 8ம் தேதி தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்துதெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+