திருப்பூரில் வெடி விபத்து: 10 வீடுகள் சேதம்
திருப்பூர்:
திருப்பூரில் வீட்டுக்குள் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 10 வீடுகள் இடிந்துநொறுங்கின. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன
திருப்பூரில் வசிப்பவர் செல்வராஜ். இவருக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில், மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இன்று அதிகாலை மாணிக்கத்தின் வீட்டில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் மாணிக்கம், அவரது மனைவி தேன் மொழி, அவர்களது ஒன்றரை வயது குழந்தை மற்றும் பக்கத்து வீட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். மாணிக்கம் குடியிருந்த வீடு உள்பட மொத்தம் 10 வீடுகள்இடிந்து நொறுங்கின. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்திற்கு காஸ் சிலிண்டர் வெடிப்பு காரணம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு ஏதேனும் வெடித்திருக்கவேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது நாச வேலையாக இருக்கலாம் அல்லது செல்வராஜ் அல்லது மாணிக்கம்ஆகியோரில் ஒருவர் வெடிபொருட்களை தயாரித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications