8ம் தேதி திமுக கூட்டணி தலைவர்கள் கூட்டம்
சென்னை:
தொகுதிப் பங்கீடு குறித்துக் கூட்டணிக்குள் பெரும் குழப்பம், பேட்டிகள், எதிர் பேட்டிகள் என பரபரப்பு நிலவி வரும் நிலையில்கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை திடீரென்று திமுக தலைவர் கருணாநிதி வரும் 8ம் தேதியன்று கூட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு பெரும் நெருக்கடியைக்கொடுத்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு கட்சியின் முதல் மட்ட, இரண்டாம் மட்ட தலைவர்கள், பேச்சாளர்கள் கவுரமான சீட்கொடுக்காவிட்டால் என்ற ரீதியில் மிரட்டும் தொனியில் பேசியும் வருகின்றனர்.குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனும்நேரடியாகவே திமுகவை மிரட்ட ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாகவே ஜெயலலிதா ஆதரவாளரான இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் திமுக கூட்டணியில் உரிய இடம் வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயேசொல்லிவிட்டார்.
இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பத்திரிகைகளிலும் பல்வேறு விதமான செய்திகள் வருகின்றன. இவையெல்லாம்ஆளுங்கட்சியால் திட்டமிட்டு பரப்பப்படும் சதி வேலை, இதற்கு கூட்டணிக் கட்சியினர் ஏமாந்து போய் விடக் கூடாது என்றுகருணாநிதி எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், வருகிற 8ம் தேதி புதன்கிழமையன்று அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் கட்டட வளாகத்தில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் தேர்தல்தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இடப் பகிர்வு தொடர்பாக இக் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி பேசுவார் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications