தமிழகம், புதுவை,கேரளாவிலும் நம் ஆட்சி: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சிக் கட்டிலில் அமரும். அதே சமயம் கேரளா மற்றும் புதுவையில் கூட்டணி ஆட்சிஅமைப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில் இதைத் தெரிவித்தார். ஜெயலலிதா பேசுகையில்,தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் நமக்கே வெற்றி, நாம் தான்மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறோம்.

புதுவையிலும், கேரளத்திலும் நாம் கூட்டணி ஆட்சி அமைப்போம். இது உறுதி. இந்த வெற்றியை முப்பெரும் விழாவாகக்கொண்டாடத் தான் போகிறோம்.

புதுவையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. களத்தில் இறங்க வேண்டியது தான் பாக்கி. கேரளாவிலும்,முன்னாள் முதல்வர் கருணாகரன் தலைமையிலான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அங்கும் நாம் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றார் ஜெயலலிதா.

இது தமிழகத்தின் பொற்காலம்

முன்னதாக நடந்த செயற்குழுக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. பின்னர் பொதுக்குழுவில் இந்ததீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொன்றாக வாசிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆமோதித்து தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. 18 தீர்மானங்கள் விவரம்:

1. முதலில் இரங்கல் தீர்மானம்: சுனாமியால் உயிரிழந்த மக்கள், நடிகர்கள் ஜெமினி கணேசன், ஆர்.எஸ்.மனோகர், சுனில்தத்,நடிகை பானுமதி உள்ளிட்ட 71 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

2. 18 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளைத் தாண்டி அதிமுகவை சிறந்த முறையில் வழி நடத்தி, பல்வேறு சாதனைகளுடன்கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி (வருகிற 24ம்தேதி) முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம்.

3. தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதிப்பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அதுபற்றி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குவழங்கும் தீர்மானம்.

4. 50 ஆண்டுகளில் யாரும் செய்ய முடியாத சாதனையை ஐந்தே ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டி அடுத்ததலைமுறையினருக்கும், இன்றைய தலைமுறையினருக்கும் வழிகாட்டியாகவும், பாடமாகவும் திகழும் முதல்வர்ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர மீண்டும் அவர் முதல்வராக அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்என்று வேண்டி ஒரு தீர்மானம்.

5. ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று தேர்தல் களத்தில் சுழன்று பணியாற்ற வெற்றி கனிபறிப்போம் என்று ஒரு தீர்மானம்.

6. காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்த முதல்வருக்கு நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து, உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள், சலுகைகளை வழங்கியும், மழை,வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானம்.

7. வெள்ள நிவாரண நிதியாக ரூ. 13,000 கோடியைக் கோரியும், வெறும் ஆயிரம் கோடியை மட்டும் ஒதுக்கியதுடன், எந்தவிதஉதவியையும் தமிழக அரசுக்கு செய்யாமல் உபத்திரவங்களை மட்டுமே செய்து வரும் மத்திய அரசுக்குக் கண்டனம். தமிழகஏழை, எளிய மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் 13 மத்திய அமைச்சர்களுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

8. ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் ரேஷன் அரிசி விலை உயர்வை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

திருக்கோவில் அன்னதானத் திட்டம், தகவல் தொழில்நுட்பப் புரட்சி, புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கைவழங்கியது, எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடமையாக்கியது, கோவில்களில் குடமுழுக்குகள் நடத்தியது,திருக்கோவில் ஊழியர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கியது, ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும்பிற்பட்ட சமுதாயத்தினருக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கியது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடிஉள்ளிட்ட பல்வேறு சாதனைகள், செயல்பாடுகளைப் பாராட்டும் தீர்மானங்கள்.

மற்றும், தமிழக நலனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வரும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து ஒருதீர்மானம்.

ஆந்திர மாநிலம் குப்பம் அருகே பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்குப் பாராட்டு.

தமிழருக்காக பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இலங்கைத் தமிழருக்கு மானிய விலையில் கொடுக்கப்படும் அரிசியைஅடியோடு நிறுத்திய மத்திய அரசைக் கண்டிக்காமல் வாய் மூடி மவுனமாக இருக்கும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழககட்சிகளுக்கும், 13 மத்திய அமைச்சர்களுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

வீரப்பன் ஒழிப்பு, வீராணம் திட்டம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய முதல்வருக்குபாராட்டும், நன்றியும் தெரிவித்து கடைசித் தீர்மானம் என மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் மீது அவைத் தலைவர் காளிமுத்து, பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் பேசினர். பின்னர் அமைப்புச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் நன்றி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+