இன்று 18 இலங்கை அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று மேலும் 18 அகதிகள் தமிழகம் வந்தனர்.
இலங்கையில் நிலவி வரும் அமைதியின்மை காரணமாக அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக வந்த வண்ணம்உள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 அகதிகள் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சனைப் பகுதிக்குபடகுகள் மூலம் வந்தனர். இவர்கள் அனைவரும் திரிகோணமலை மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
தனுஷ்கோடி போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications