தமிழக அமைச்சர்களுக்கு பிரதமர் பாராட்டு
சேலம்:
மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகமுன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
சேலம் முதல் ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை ரூ. 1100 கோடி மதிப்பில் போடப்படவுள்ள நான்கு வழிச் சாலைக்கானஅடிக்கல் நாட்டு விழா சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், கருணாநிதி, ராமதாஸ்,வைகோ ஆகியோரின் திறமையான வழிகாட்டுதல், ஆலோசனைப்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாட்டைமுன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது.திறமையான மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், மணிசங்கர அய்யர், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், அன்புமணி உள்ளிட்டோர்என்னுடன் பணியாற்றி வருகிறார்கள். இவர்களால் தமிழகத்திற்கு நிறைய பலன்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் விதமாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. தமிழக மக்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழுக்கு செம்மொழிஅந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழின் மேம்பாட்டுக்காக இன்னும் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும்.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்ய மிகப் பெரிய அளவில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 5500 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதற்காகநெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவை நான் பாராட்டுகிறேன்.
சேலம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான இரும்பாலை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தி அதைஒருங்கிணைந்த இரும்பாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மன்மோகன் சிங்.
இந்நிகழ்ச்சியில், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாமகநிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசெயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே நடந்த நிகழ்ச்சியிலும் மன்மோகன்சிங்கலந்து கொண்டார். அங்கு கிருஷ்ணகிரி முதல் சமயநல்லூர் வரை போடப்படவுள்ள 4 வழி சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மன்மோகன்சிங் பேசுகையில், நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்என்று வைகோ கூறினார். அத்திட்டத்தை மத்திய அரசு மறந்து விடவில்லை. இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
விரைவில் பணிகள் தொடங்கும். தமிழகத்தில் 3250 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன. இவை அனைத்தும் 4 வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இத்திட்டம் முடிவடைந்தால், தமிழகம்பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும்.
நாட்டில் நிலவும் ஏழ்மையை அடுத்த 10 ஆண்டுகளில் ஒழிக்க வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசுஎடுக்கும் என்று பேசினார் அவர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மதுரைக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரதமர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.












Click it and Unblock the Notifications