4 பலி: சாராய வியாபாரி, 3 மனைவிகள் கைது
சேலம்:
சேலம் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில், கள்ளச் சாராயத்திற்கு 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரியைபோலீஸார் கைது செய்தனர். சாராய விற்பனையில் துணையாக இருந்த அவரது 3 மனைவிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 5 போலீஸார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன் என்ற கள்ளச் சாராய வியாபாரி போலீஸ் துணையுடன் சாராயம்விற்று வந்தார். மாமூல் கொடுத்துவிட்டு தைரியமாக விற்று வந்தார்.
இந் நிலையில் அவரிடம் சாராயம் குடித்த 4 பேர் இறந்தனர். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் உயிர் போன பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனையும், அவரது 3 மனைவிகளையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ராஜேந்திரன் அதிமுகவைச் சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போலீசார் சிலமாதங்களில் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். ஆனால், போன உயிர்கள்?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications