ஆளுக்கு 20- கொடி தூக்கும் கம்யூனிஸ்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆளுக்கு 20 சீட்கள் என்ற கணக்கில் 45 முதல் 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சிகள் தயாரித்துள்ளன. இந்த பட்டியலை திமுக தலைவர் கருணாநிதியிடம், 8ம் தேதி வழங்கவும்திட்டமிட்டுள்ளன.

கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணிஅமைத்துப் போட்டியிட்டன. ஆளுக்கு 8 தொகுதிகளை அப்போது ஜெயலலிதா ஒதுக்கினார்.

இம்முறை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக அணியில் உள்ளன. திமுக கூட்டணியில் நீடிக்கும் கட்சிகள் தப்பி விடாமல்தடுக்கும் கட்டாயத்தில் திமுக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே கூடுதல் இடம் கேட்டுமிரட்டி வருகின்றன.

பாமக 50 தொகுதிகள் வரை கேட்கிறது. அதே அளவிலான தொகுதிகள் தங்களுக்கும் தேவை என்று காங்கிரஸ் கூறுகிறது.நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று கூறி, 50க்குக் குறையக் கூடாது என்று மதிமுகவும் கோருகிறது.

இந் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுக்கு 20 சீட்டாவது தந்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

இதுதவிர, இதுவரை கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்து வந்த ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சிறு கட்சிகளும் சிலதொகுதிகளை இம்முறை எதிர்பார்க்கின்றன. சேதுராமன், ராஜ. கண்ணப்பன் ஆகியோரும் உள்ளனர்.

இப்படி ஏகப்பட்ட கட்சிகள் தொல்லை தந்து வரும் நிலையில் இவர்களை எப்படிக் கட்டி மேய்ப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளது திமுக.

தொகுதிப் பங்கீடு குறித்து எக்குத்தப்பாகவே செய்திகள் வந்து கொண்டிருப்பதால் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை8ம் தேதி கூட்டியுள்ளார் கருணாநிதி. இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசரநிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

இன்றைய கூட்டத்தில் அதிமுக ஆதரவாளரான இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பொலிட்பீரோ உறுப்பினர்நல்லகண்ணு, சட்டசபை கட்சித் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. மாநிலச்செயலாளர் வரதராஜன் இக்கூட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். சங்கரய்யா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில்பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டங்களில், திமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகள் எத்தனை, எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது. ஆளுக்கு 25 தொகுதிகளைத் தேர்வு செய்து மொத்தமாக 50 தொகுதிகள் கொண்டபட்டியலை கருணாநிதியிடம் 8ம் தேதி வழங்க இரு கம்யூனிஸ்டுகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறைந்தது 40 என்ற நிலைப்பாட்டை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுத்துள்ளதாகவும், இதில் குறைபாடு இருந்தால், மீண்டும்இரு கட்சியினரும் கூடிப் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை (அணி மாற்றம்?) குறித்து முடிவெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது.

இரு கட்சிகளும் 40,50 என்று பட்டியல் தயாரித்தாலும் கூட இருவருக்கும் சேர்ந்து அதிகபட்சம் 18 தொகுதிகளுக்கு மேல்கிடைக்காது என்று கூறப்படுகிறது. தோழர்கள் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+