எனக்கா பயம்? ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் வருகிறது என்றவுடனேயே சலுகைகளை வாரி வழங்கும் ஜெயலலிதாவுக்கு பயமா, இல்லை எனக்குப் பயமா என்று திமுகதலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

தேர்தலை சந்திக்க கருணாநிதி பயப்படுகிறார், நடுங்குகிறார், வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அவரிடம் இல்லை என்றுஅதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் வருகிறது என்றவுடன்அஞ்சி நடுங்குவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். உண்மையில் எனக்கு பயமா, இல்லை அவருக்குப் பயமா என்பதை மக்கள்அறிவர்.

தேர்தல் நெருங்குகிறது என்று தெரிந்தவுடன் தான் அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார், சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கிறார் ஜெயலலிதா என்பது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியுமே.

யாராவது கட்சியில் சேர மாட்டார்களா, தேர்தலுக்குள் எந்தக் கட்சியையாவது வளைத்து விட முடியாதா என்ற பயத்தில் உள்ளஜெயலலிதா, காவல் துறையில் உள்ள சில அதிகாரிகளை வைத்து வலை வீசித் தேடி வருவதை அனைவரும் அறிவர். இது பயம்இல்லையா?

சுனாமி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி விட்டோமே, சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து, உடமைகளை இழந்து,உறவுகளை இழந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்களா என்ற பயம் ஜெயலலிதாவிடம் தானே உள்ளது.

எம்.ஜி.ஆர். நகரில் 42 பேரின் உயிரைக் குடித்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையில் குட்டியும் அதைக்கண்டுகொள்ளாமல், பதவி விலகாமல் இருக்கிறோமே, நாளை தேர்தலில் படித்தவர்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்களா என்றுபயந்து நடுங்குவது யார், நானா இல்லை ஜெயலலிதாவா என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+