ஜெயாலலிதா-கருணாகரனின் மெகா பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் சட்டமன்றத் தேர்தலில் கேரள காங்கிரஸ் அதிருப்தியாளரும், தீவிர சோனியா எதிர்ப்பாளருமான முன்னாள் முதல்வர்கருணாகரன் தொடங்கியுள்ள ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சி, தமிழக காங்கிரஸ் அதிருப்தித் தலைவர் திண்டிவனம்ராமமூர்த்தி, புதுவை கண்ணனின் புதுவை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.

சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் மீண்டும் நம் ஆட்சி அமையும், புதுவையிலும்,கேரளாவிலும் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றார்.

ஜெயலலிதாவின் இந்தப் பேச்சின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் திட்டம் உள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், சோனியாவுடன் மோதி காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜனநாயக இந்திராகாங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். இக்கட்சியின் தலைவராக கருணாகரனின் மகன் முரளீதரன் உள்ளார்.

இக்கட்சி, கேரளத்தில் மிகப் பெரிய கூட்டணியை அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்கூட்டணி அமைக்கவுள்ள கருணாகரன், தனது கூட்டணியில் அதிமுகவையும் சேர்க்கவுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாககடந்த வாரம் தமிழக அமைச்சர் தளவாய் சுந்தரம், திருவனந்தபுரம் சென்று கருணாகரன் மற்றும் முரளீதரனுடன் பேசியுள்ளார்.

அப்போது ஜெயலலிதா கொடுத்தனுப்பிய கடிதத்தையும் அவர் கருணாகரனிடம் கொடுத்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தேர்தலை கூட்டாக சந்திக்க முடிவாகியதாம்.

கேரளாவில் மட்டுமல்லாது தமிழகம், புதுவையிலும் கருணாகரன் கட்சி கால் வைக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் இக்கட்சிஅதிமுகவுடன் கூட்டணி அமைக்கும். மலையாளிகள் அதிகம் வசிக்கும் நாகர்கோவில், கோவையில் ஒரு தொகுதியைகருணாகரன் கட்சிக்கு அதிமுக வழங்குமாம்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை இழுத்து தனது கட்சியில் சேர்த்து அவர்கள் மூலம் தமிழகத்திலும்நுழைகிறது கருணாகரனின் கட்சி. தமிழகத்தில் இக்கட்சியின் தலைவராக திண்டிவனம் ராமமூர்த்தி நியமிக்கப்படவுள்ளார்.அதிமுக கூட்டணியில் ராமமூர்த்தியின் ஆட்களுக்கு வட தமிழகத்தில் சில இடங்கள் (வன்னியர் பகுதிகளில்) தரப்படமாம்.

அதேபோல, புதுவையில் முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதுவை மக்கள் கட்சியுடன் கருணாகரன் கூட்டணி அமைக்கிறார்.இந்தக் கூட்டணியில் அதிமுகவும் இடம் பெறுகிறது. கேரளாவைப் போல புதுவையிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தனதுகூட்டணியில் சேர்க்கிறார் கண்ணன்.

மூன்று மாநிலங்களில் போட்டியிடுவதன் மூலம் கருணாகரனின் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும்வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, அதிமுக மற்றும் புதுவை மக்கள் காங்கிரஸுடன் கூட்டு சேர கருணாகரன்திட்டமிட்டுள்ளாாராம்.

தேசிய அங்கீகாரம் பெற்று, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஒரு அணியைத் திரட்டுவது கருணாகரனின் நோக்கமாம். இதில்முக்கிய அங்கம் வகிக்கப் போவது ஜெயலலிதா மற்றும் உ.பி. முதல்வர் முலாயம் சிங், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுஆகியோர் என்கிறார்கள்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை இழுத்து மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கவும் கருணாகரன்முயலுகிறார். அதேசமயம், கருணாகரன் மூலமாகக் தேசிய அரங்கில் தனது முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஜெயலலிதாநினைக்கிறார்.

இதை மனதில் கொண்டே பல்வேறு கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசி வருவதாக ஜெயலலிதாசூசகமாகத் தெரிவித்ததாகத் தெரிகிறது.

அத்தோடு, தனது கூட்டணிக்குள் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம்,கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் ஆகியவற்றையும் இழுக்க பல வகைகளிலும் ஜெயலலிதா முயன்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+