குஷ்பு விவகாரம்: டெல்லிக்கு தனிப்படை
டெல்லி
நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகிய 3பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறி டெல்லியில் உள்ள அந்தப் பத்திரிக்கையின் அலுவலகத்தில் சென்னைபோலீஸார் சம்மன் வழங்கியுள்ளனர்.
லண்டனிலிருந்து வெளியாகும் மேக்ஸிம் ஆங்கிலப் பத்திரிக்கையின் இந்தியப் பதிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த முதல்இதழில் நடிகை குஷ்புவின் ஆபாசப் படம் வெளியாகியிருந்தது. ஆனால் இந்தப் படம் மார்ஃபிங் மூலம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதனால் கோபமடைந்த குஷ்பு, மேக்ஸிம் பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறைஆணையரை சந்தித்துப் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் துரித கதியில் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
முதலில் சென்னை நகரில் உள்ள புத்தகக் கடைகளில் சோதனை நடத்தி மேக்ஸிம் பத்திரிகைகளை பறிமுதல் செய்தனர்.தலைமறைவாகி விட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் சென்னை நகர முகவரை தேடி வருகின்றனர்.
சமீபத்தில் குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி. ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து தற்போதுஇன்ஸ்பெக்டர் இன்ப குமார் தலைமயிலான தனிப்படை டெல்லிக்கு சென்றது.
மேக்ஸிம் பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்ற அவர்கள் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரிடம் விசாரணைநடத்த முயன்றனர். ஆனால் அவர்களை சென்னை போலீஸாரால் சந்திக்க முடியவில்லை.
இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறி 3 பேருக்கும் சம்மன் தரப்பட்டது. இந்த சம்மன் உத்தரவை பத்திரிக்கைஅலுவலகத்தில் சென்னை போலீஸார் ஒப்படைத்தனர்.
சம்மனை ஏற்று அவர்கள் ஆஜராகவிட்டால் நீதிமன்றம் மூலம் சம்மன் பிறப்பிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications