போலீஸ் முன்னிலையில் ஒரு படுகொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை ஒத்தக்கடை பகுதியில் போலீஸ் நிலையம் முன்பாக, போலீஸாரின் கண் முன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ஒத்தக்கடை பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பந்தல் அமைத்தவர்களுக்கும், ஒலிஒளி அமைப்பு செய்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பும் நடந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ரவி என்பவர் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். அப்போது எதிர் தரப்பினர் காவல் நிலையம் வந்து இதை சமரசமாக பேசித் தீர்த்துக் கொள்கிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து விட்டு ரவியை வெளியே அழைத்துச் சென்றனர்.

அவர்கள் பஞ்சாயத்து பேசுவதை சில போலீஸார் உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். (சமரசம் ஏற்பட்ட பின் காசு வாங்கத் தான்) அப்போது திடீரென அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ரவியின் தம்பி கண்ணன் என்பவர் தன்னிடம் வைத்திருந்த கத்தியை எடுத்து மூன்று பேரை சரமாரியாகக் குத்தினார். இதில் சுந்தரமூர்த்தி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இரண்டு பேரும் காயத்துடன் தப்பினர்.

தங்கள் கண் முன்பாகவே நடந்து விட்ட இந்தப் படுகொலையை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

கொலை நடந்து முடிந்த பின் பொது மக்கள் உதவியுடன் கண்ணனை மடக்கி கைது செய்தனர் போலீசார்.

காவல் நிலையம் முன்பாக, போலீஸார் முன்னிலையில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+