தேவுடா தேவுடா.. நான் ஓடலை: பொன்னையன்
சென்னை:
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தற்காலிகமாக தலைமறைவாகி விட்ட நிதியமைச்சர் பொன்னையன் தான்எங்கும் ஓடி விடவில்லை என்று கூறியுள்ளார்.
நிதியமைச்சர் பொன்னையன் சமீபகாலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றிருந்த நற்பெயரை இழந்து வந்தார். இந்த நிலையில்அவரை ஓரம் கட்டி வைத்த ஜெயலலிதா, பொன்னையனிடம் இருந்த அவைத் தலைவர் பதவியைப் பறித்து காளிமுத்துவைஅந்தப் பொறுப்பில் அமர்த்தியுள்ளார்.சிறு சேரி நிலத்தை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு தமிழக அரசு விற்ற விவகாரத்தில் பொன்னையனுக்கும்அவரது மகனுக்கும் தொடர்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. தன்னையும் மீறி பொன்னையன் அதிக உரிமை எடுத்துசில உத்தரவாதங்களை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு தந்ததாக ஜெயலலிதா கோபத்தில் இருப்பதாகவும், இதனால் தான் அவரைஓரம்கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொன்னையன் கலந்து கொள்ளவில்லை. அவர்சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் இல்லை. இதனால் பொன்னையன் எங்கே என்ற பரபரப்பு ஏற்பட்டது.
அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது, தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா என்ற ரிங்டோன் பாடல் தான் கேட்டது.போனை அவர் எடுக்கவே இல்லை.
ஏற்கனவே முதல்வருடன் மோதியதால், சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகி விட்டார்.அதேபோல பொன்னையனும் எங்காவது போய் விட்டாரா என்று பரபரப்பு தகவல் கிளம்பியது. இந் நிலையில் தான் எங்கும்ஓடிவிடவில்லை என்று பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் சில காரணங்களால் அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தற்போதுநியமிக்கப்பட்டுள்ள காளிமுத்து கட்சியில் சீனியர், அந்தப் பொறுப்புக்கு முழுத் தகுதியும் உடையவர்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து விசேஷ காரணம் ஏதுமில்லை. கூட்டத்தைப்புறக்கணிக்கவில்லை. அந்த சமயத்தில் எனது சகோதரிரிவீட்டுக்கு சென்றிருந்தேன். அதனால் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதற்காக சிலர் வந்து துக்கம் விசாரித்தார்கள். அது இயற்கைதானே.
நான் ஒன்றும் கராத்தே தியாகராஜன் அல்ல, நாட்டை விட்டு ஓடிப் போவதற்கு. ஆண்டவனை நான் நம்புகிறேன். திருப்பதிக்கோவேறு எங்குமோ நான் போகவில்லை. திருவேற்காடு கோவிலில் நடந்த சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டேன்.
சிறு சேரி நிலம் தொடர்பாக திமுகவினர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அது 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம்.அதற்கும், எனது துறைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. எனது 2 மகன்களும் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள்.எதற்காக நான் ஓட வேண்டும்?
கோட்டைக்கு தினசரி செல்லும் அமைச்சர் நான் மட்டுமே. சனிக்கிழமை கூட கோட்டைக்குச் சென்று பணிகளைப் பார்ப்பேன்.காலையில் போனால் மாலை 3 மணி வரை அலுவலகத்தில்தான் இருப்பேன்.
கட்சியில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக என்னுடைய பெயரை களங்கப்படுத்தக் கூடாது. நான் எங்கும்ஓட வேண்டிய அவசியம் இல்லை. நான் இங்கு தான் இருக்கிறேன் என்றார் பொன்னையன்.
சிறு சேரி நிலப் பிரச்சினை, என் பெயரை (கட்சித் தலைமை) களங்கப்படுத்தக் கூடாது என பொன்னையன் இலைமறைகாய்மறைவாக பேசியுள்ளதால், இதன் பின்னணியில் ஏகப்பட்ட விவகாரங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications