7 கட்சி கோவிந்தா : நடிகர் செந்தில்
சென்னை:
சென்னையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில், தேவுடா தேவுடா பாட்டை உல்டா செய்து கோவிந்தா கோவிந்தா 7 கட்சிகோவிந்தா என்று பாட்டுப் பாடி பிரசாரம் செய்தார் நகைச்சுவை நடிகர் செந்தில்.
முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே தகுதியில், அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் செந்தில், அதிமுகவுக்கு ஆதரவாகபிரசாரத்தில் குதித்துள்ளார்.சென்னை வண்ணாரப்பேட்டையில் அவர் கலந்து கொண்ட முதல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு செந்தில்பேசுகையில் (சினிமாவில் தான் சரளமாக பேசுகிறார்,
இந்தக் கூட்டத்தில் வார்த்தைகள் அவ்வளவு கோர்வையாக வரவில்லை!), முதலில் ஒரு பாட்டு பாடுகிறேன். அதாவது, கோவிந்தா கோவிந்தா 7 கட்சி கோவிந்தா, போச்சுடா, போச்சுடா காஞ்சிபுரம்,கும்மிடிப்பூண்டி தொகுதிகள் போச்சுடா, எல்லாமே அம்மா தான்,
எல்லாமே அம்மா தான், எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கை தட்டுங்கடா!
தமிழ்நாட்டில் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கு. சென்னையில் அழகான பூங்காக்களை கட்டிக்கொடுத்துள்ளார். சென்னைக்குக் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்ட போது, லாரியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அப்புறம்புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றினார். இப்போது குடிநீர் பஞ்சமே சென்னையில் இல்லை.
வீரப்பனை யாருமே புடிக்க முடியாது என்று சவால் விட்டார்கள். ஆனால் அம்மா அவனை வீழ்த்திக் காட்டியுள்ளார். அதேபோல கட்டப் பஞ்சாயத்தும் இப்போ கிடையாது, ஒழிஞ்சு போச்சு, குண்டர்களையும் காலி செய்து விட்டார்.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு தப்பு பண்ணிட்டாங்க, 39 எம்.பிக்களை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பியது தான் அவர்கள் செய்தபெரிய தப்பு. அதில் 13 பேர் மத்திய அமைச்சர்களாக வேறு இருக்காங்க. ஆனால் அவங்களால எந்த நன்மையும் தமிழகத்துக்குக்கிடைக்கல. இனி மேல் அவர்கள் ஓட்டு கேட்க வந்தால் ஓட்டுப் போடாதீங்க, சரியா?
7 கட்சிக் கூட்டணி, 7 கட்சிக் கூட்டணி என்று பயமுறுத்தறாங்க. அந்தக் கூட்டணி வரும் தேர்தலில் தோற்றுப் போகும். மக்கள்அவங்களை தோற்கடிக்க வேண்டும்.
சினிமாவில் தான் நான் கவுண்டமணியிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் நிஜத்தில், திமுக கூட்டணிக்கு அடி கொடுக்கப்போகிறேன் என்றார் செந்தில். செந்திலின் இந்த இயல்பான பேச்சுக்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கலகலப்பானவரவேற்பு காணப்பட்டது.
நடிகர் ராதாரவி, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பேசினர். வழக்கமாகராதாரவி, எஸ்.எஸ்.சந்திரனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்தக் கூட்டத்தில் செந்திலுக்குக் கிடைத்ததுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications