கோவை விபத்து: மாணவி, 2 மாணவர்கள் பலி
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒரு மாணவி, 2 மாணவர்கள்உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நித்யா, அருண்சங்கர், அருண் சுப்பையா, ஜோசப் ஆகிய நான்கு கல்லூரிமாணவர்கள் இன்று காலை கார் மூலம் சொந்த ஊருக்குக் கிளம்பினர்.அப்போது மதுக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, முன்புறம் சென்று கொண்டிருந்த ஒருலாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் நிலை தடுமாறிய கார், பயங்கர வேகத்தில் லாரி மீது மோதியது.
இதில் நித்யா, அருண்சங்கர், அருண் சுப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கார் டிரைவர் பிரபு தேவராஜ், மாணவர் ஜோசப் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி நித்யா சென்னையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் லண்டனில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நித்யா இறந்த தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications