ராமதாஸ் தலைமையில் 3ம் அணி-திருமா யோசனை
சென்னை:
வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் அரசியல் சக்தியாக எழுச்சி பெற டாக்டர் ராமதாஸ் தலைமையில் புதிய அணி உருவாவதுஒன்றுதான் சரியான வழி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிமுகவை நோக்கி செல்லும் கட்சிகள் என எதிர்பார்க்கப்படும் சில கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளும் ஒன்று. தேர்தல்நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி குறித்தும் புதுப் புது செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளது.இந் நிலையில் திருமாவளவன் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழக அரசியலில் புதிய சக்தியாக வன்னியர்களும், ஆதி திராவிடர்களும் உருவாகும் நேரம் வந்து விட்டது. இரு சமூகத்தினரும்இணைந்து புதிய அணி அமைக்க வேண்டும். அப்போதுதான் தமிழக அரசியலில் புதிய சக்தியாக இரு சமூகமும் எழுச்சி பெறமுடியும். இந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்க மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி (ராமதாஸ்) முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக இதுவரை நான் தமிழ்க்குடிதாங்கியிடம் பேசவில்லை. ஆனால் நிச்சயம் பேசுவேன். எனது கருத்தை அவர் மறுக்கமாட்டார் என நம்புகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகளை திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்க்குடிதாங்கி தொடர்ந்து கோரி வருகிறார். ஆனால்இதுவரை கருணாநிதி எந்தப் பதிலையும் தராமல் மெளனம் சாதித்து வருகிறார். இது ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும்செயலாகும்.
மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி தலைமையில் மாற்று அணி அமைப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் வருகிற 15ம் தேதி கூடும்விடுதலைச் சிறுத்தைகள் மையக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.
இலங்கையில் மீண்டும் போர்ச்சூழல் எழுந்துள்ளது. இதைத் தடுக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசைதட்டி வைக்க வேண்டும். இலங்கையில் அமைதியின்மை நிலவுவதால் அகதிகள் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அகதிகளுக்கான உணவு மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தமிழர் விரோதநடவடிக்கை இது. மத்திய அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும்கண்டிக்காமல் வாய் மூடியிருப்பது வருத்தம் தருகிறது என்றார் திருமாவளவன்.
ராமதாஸ் தலைமையில் மாற்று அணி அதாவது 3வது அணி என்ற கருத்தை திருமாவளவன் இந்த சமயத்தில் கூறியிருப்பது புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் ராமதாஸ் தொடரப் போவதில் எந்த சந்தேகமும் இல்லாவிட்டாலும்,திருமாவளவனை கூட்டணியில் சேர்க்க கருணாநிதி தயக்கம் காட்டி வருகிறார்.
இதனால் குட்டையைக் குழப்பவே திருமாவளவன் இவ்வாறு பேசியிருப்பதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications