விஜயகாந்த் பிரச்சாரம் பாதியில் ரத்து
கரூர்:
கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் தொண்டை வலி ஏற்பட்டு பேச முடியாமல் அவதிப்பட்டார் நடிகர் விஜயகாந்த்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரான விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் இப்போதே குதித்து விட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று சினிமாவில் பேசுவது மாதிரியே வசனம் பேசி வரும் விஜயகாந்துக்கு தொண்டை ஒத்துழைப்பு தர மறுக்கிறது.தொண்டை வலியால் தனது பிரச்சாரத்தை அவ்வப்போது ரத்து செய்து வருகிறார்.
இந் நிலையில் கரூர் மாவட்டத்தில் அவர் 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார்.
சோமூர், பசுபதிபாளையம், தொழிற்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அவர் பேசினார். அப்போது சரிவர பேச முடியாமல் அவதிப்பட்டார். தொண்டை அடிக்கடி கமறியது.
இதையடுத்து எனக்கு தொண்டை வலி உள்ளது. எனவே என்னால் சரியாக பேச முடியவில்லை. தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றவர், அடுத்து குளத்துப்பாளையம் என்ற இடத்தில் சைகை மொழியில் பேசினார்.
இதையடுத்தும் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டதால் கரூர் பரமத்தி, வாங்கல், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, ஈசநத்தம், சின்ன தாராபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் மேற்கொள்ள இருந்த பிரசாரத்தை ரத்து செய்தார் விஜயகாந்த்.
இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications