அரசு வழக்கறிஞர்: ஜெயேந்திரர் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரிய ஜெயேந்திரரின் மனுவைசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சங்கரராமன் கொலை வழக்கு தற்போது புதுவை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், காவல்துறை சார்பில்தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதை எதிர்த்து புதுவை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் இந்த மனுவை புதுவை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் புதுவை அரசுவழக்கறிஞர்கள்தான் இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக ஆஜராக வேண்டும். தமிழக அரசு வழக்கறிஞர்கள்ஆஜராகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஜெயேந்திரர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெயபால், ஜெயேந்திரரின் மனுவைத் தள்ளுபடி செய்தார். சங்கரராமன் கொலைவழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக உரிமை உண்டு. இதற்குத் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து புதுவை நீதிமன்றத்தில் வருகிற 15ம் தேதி முதல் சங்கரராமன் வழக்கு விசாரணை தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+