எதை அருந்திக் கொண்டிருந்தார் ஜெ?-கருணாநிதி
சென்னை:
வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆகி சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் விஷம் அருந்திஇறந்துகொண்டிருந்தபோது ஜெயலலிதா எதை அருந்திக் கொண்டிருந்தார் என திமுக தலைவர் கருணாநிதி மிகக் காட்டாகக்கேட்டுள்ளார்.
அதிமுக செயற்குழுவில் ஜெயலலிதா பேசுகையில், தொண்டர்களுக்காக தான் விஷம் கூட அருந்தத் தயார் என்று பேசினார்.இதுகுறித்து முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசுகையில், தொண்டர்களுக்கு விஷத்தை நான் கொடுக்க மாட்டேன். அவர்களுக்காகநான் விஷம் அருந்தத் தயார் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆனால், உரிமைகளுக்காகப் போராடி ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் ஆகிய சோகத்தில் சில அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்,விவசாயம் பாதிக்கப்பட்ட சோகத்தில், சில விவசாயிகளும் விஷம் அருந்தியபோது ஜெயலலிதா எதை அருந்திக்கொண்டிருந்தார்?
சாலைப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்த நான்கரை ஆண்டு காலம் தவிக்க விட்டு விட்டு இப்போது தேர்தல் வருகிற நிலையில்அவர்களுக்கு மீண்டும் வேலை என்று கூறியுள்ள ஜெயலலிதா மக்கள் நலப் பணியாளர்களை மறந்தது ஏன் என்று கேட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க 9 பேர் குழு:
இதற்கிடையே சட்டசபைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க 9 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிக்கையைத் தயாரிக்க ஒரு அமைப்பாளர், 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது.
இக் குழுவில் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், கோ.சி.மணி, பொன்முடி, ரஹ்மான்கான், செ.குப்புசாமி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர்இடம் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications