22ம் தேதி புலிகள்- இலங்கை மீண்டும் பேச்சு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி மீண்டும்தொடங்கும்என நார்வே தூதுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான நடவடிக்கையில், நார்வே இறங்கியது.
இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பினரும் முன் வந்தனர். ஆனால், தேதி இறுதி செய்யப்படுவதில் தாமதம்நிலவியது. இந் நிலையில் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை லண்டன் சென்று நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக்சோல்ஹைம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தையை தொடங்க முடிவானது. இந்தத் தேதிக்கு இலங்கை அரசும் ஒப்புதல்அளித்தது.
இதைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி ஜெனீவா நகரில் நார்வேயும் பங்கு பெறும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
இரண்டு நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதையொட்டி இலங்கையில்வன்முறைச் சம்பவங்கள் பெருமளவில் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications