திராவிட கட்சிகள்: நாடார்கள் அமைப்பு அதிருப்தி
சென்னை:
நாடார் சமு தாயத்தினரின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாமல் அவர்களை அத்தனை திராவிடக் கட்சிகளும் ஏமாற்றிவிட்டதாகவும் இதனால் திராவிடக் கட்சிகளுக்கு வரும் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நாடார் சமுதாயத்தினர் யோசிக்கவேண்டும் என்றும் நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடார் சமுதாயத்தினரின் பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாககிடப்பியே போடப்பட்டுள்ளன. பனை மற்றும் தென்னை விவசாயிகள் நல வாரியம் கோரி பல காலமாக நாடார் சமுதாயத்தினர்போராடி வருகின்றனர்.ஆனால் அதை கண்டு கொள்ளவே மறுக்கின்றன திமுக மற்றும் அதிமுக கட்சிகள்.
தற்போது டாஸ்மாக் நிறுவனம் மது பான விற்பனையை கவனித்து வருகிறது. இப்போதாவது, டாஸ்மாக் நிறுவனங்கள் மூலம் கள்விற்பனையை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் பனை மற்றும் தென்னை மரம் ஏறிப் பிழைக்கும் நாடார்சமுதாயத்தினருக்கு பேருதவியாக இருக்கும்.
நாடார் சதாயத்தினரின் மக்கள் தொகைக் கணக்குப்படி 30 எம்.எல்.ஏக்களாவது சட்டசபையில் இருக்க வேண்டும். ஆனால்அந்த நிலை இன்று இல்லை. மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட பதவி கிடைக்கவில்லை.
திராவிடக் கட்சிகளால் நாடார் சமுதாயத்தினருக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் நாடார் சமுதாயத்தினர்இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
திமுகவுக்கு உ.உ. கட்சி ஆதரவு:
இந் நிலையில் கோவையில் நடந்த உழவர் உழைப்பாளர் கட்சியின் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகதலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications