ப.சிதம்பரமா?அன்புமணியா?-கண்காட்சி பாலிடிக்ஸ்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்கக் கண்காட்சியில் சுகாதாரத் துறை தொடர்பானசாதனைகள் எதுவும் இடம் பெறாததால், அந்த விழாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும்பாமகவினர் புறக்கணித்தனர்.
காரைக்குடியில், மத்திய அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் இதை தொடங்கி வைத்தார்.இந்தக் கண்காட்சியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விழாவுக்கு வரவில்லை. திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மட்டுமேகலந்து கொண்டார். பாமகவினர் யாரும இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட பாமக துணைத் தலைவர் பூலித்தேவ பாண்டியன் கூறுகையில்,
இக் கண்காட்சியில் முழுக்க முழுக்க ப.சிதம்பரத்தின் சாதனைகள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. (சிவகங்கை அவர்தொகுதியாச்சே) இது திட்டமிட்ட சதி. பாமகவின் சாதனைகள் எதுவும், குறிப்பாக ரயில்வே மற்றும் சுகாதாரத் துறையில்நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள் எதுவும் கண்காட்சியில் இடம் பெறவில்லை.
இதனால் தான் அமைச்சர் அன்புமணி இந்த விழாவைப் புறக்கணித்தார். பாமகவினரும் இந்த விழாவைப் புறக்கணித்துள்ளனர்என்றார்.












Click it and Unblock the Notifications