போராட்டத்தில் குதிக்கும் மக்கள் நல பணியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியதைப் போல தங்களுக்கும் தமிழக அரசு மீண்டும் வேலை தர வேண்டும்என்று கோரி தமிழகம் முழுவதும் ஐந்து நகரங்களில் வரும் 15ம் தேதி 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 9,000க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள், 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்து ஐந்து ஆண்டுகாலமாக இவர்கள் மீண்டும் வேலை கோரி போராட்டம் நடத்தி வந்தனர். பலர்தற்கொலையும் செய்து கொண்டனர்.

இந் நிலையில் தேர்தல் வருவதை மனதில் வைத்து இவர்களில் சாலைப் பணியாளர்களுக்கு மட்டும் அரசு மீண்டும் வேலைவழங்கியுள்ளது. ஆனால் மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து எந்த சத்தமும் இல்லை.

இதையடுத்து சாலைப் பணியாளர்களைப் போலவே தங்களுக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள்தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

முதல் கட்டமாக சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சை, ஈரோடு ஆகிய நகரங்களில் வரும் 15ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் அவர்கள் குதிக்கிறார்கள்.

மேலும் பல்வேறு வகையில் போராட்டங்களைத் தொடரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+