ஜெயாவுக்காக இதுவரை 1200 விண்ணப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை தங்களது தொகுதியில் போட்டியிடக் கோரி 1,200 பேர் விண்ணப்பம்அளித்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி முதல் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் வாங்கும் பணி தொடங்கியது. முதல் நாளில் மட்டும் ரூ.10,000 செலுத்தி 1,071 பேர் மணு கொடுத்தனர். இதில் 500 மனுக்கள் ஜெயலலிதாவுக்கு சீட் கேட்டும், அவரை தங்களதுதொகுதியில் போட்டியிடக் கோரியும் தரப்பட்டன. இதனால் முதல் நாள் வசூலே ரூ. 1 கோடியைத் தாண்டியது.

ஜெயலலிதாவை பல வகைகளிலும் ஐஸ் வைக்க பல பிரமுகர்களும் பல வகையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.மாஜிஎம்பியான திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவுக்காக 6 தொகுதிகளில் சீட் கேட்டு ரூ. 60,000த்தைக் கட்டினார்.

தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இன்று வரை 7,500 பேரிடம் இருந்து மனுக்கள் வந்துள்ளன. இதில் 1,200மனுக்கள் ஜெயலலிதாவுக்காக தரப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மூலம் இன்று வரை ரூ. 6 கோடிக்கும் அதிகமாக பணம்வசூலாகியுள்ளது.

தமிழகம் தவிர பாண்டிச்சேரி, கேரளாவில் போட்டியிடவும் மனுக்கள் தரப்படுகின்றன. இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் போட்யிட சீட் கேட்டு விண்ணப்பம் கொடுத்தார்.

போளூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி 58 தட்டுக்களில் சீர் வரிசைஎடுத்து வந்து நடிகர் ஜெயகோவிந்தன் (எந்த படத்துல?) விண்ணப்பம் வழங்கினார்.

விண்ணப்ப மனு கொடுக்க வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் கவுண்டர்களின் எண்ணிக்கையும் இரண்டுமடங்காக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தலைைம அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலைப்பகுதியே கரை வேட்டிகளால் தள்ளாடுகிறது.

இவர்களுக்கு டீ, காபி, சிகரெட், பாக்கு, வெற்றிலை, புரோட்டா, சால்னா விற்க ஆங்காங்கே குட்டிக் குட்டிக் கடைகளும்முளைத்துவிட்டன.

மனு வாங்குவது, பணம் வாங்குவது, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, ரிசிப்ட் தருவது போன்ற பணிகளில் 50 பேர்ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் வெயிலில் இருந்து தப்பிக்க வசதியாக கட்சி அலுவலகத்தில் பந்தலும் போடப்பட்டுள்ளது.

15ம் தேதி வரை மனுக்கள் வாங்கப்படும். இதன் பிறகு வேட்பாளர்களுக்கு இன்டர்வியூ நடத்தி தேர்வு செய்வார் முதல்வர்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+