ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..: அப்படியெல்லாம் வரக் கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தான் வழங்கி வரும் சலுகைகளை கேலி செய்யும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில்இரண்டு கதைகளை சொல்லி பதிலடி கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா.

மாநாட்டில் ஜெயலலிதா பேசுகையில்,

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை, உதவிகளை வழங்கி வருகிறது. இதைப்பொறுக்க முடியாத சிலர், ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே (1.5 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்துவீடு புகுந்து இழுத்துச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தது) என்று இதனைக் கொச்சைப்படுத்தி தங்களது ஆதங்கத்தையும்,ஆற்றாமையையும் தீர்த்துக் கொள்ள முயல்கின்றனர்.

இதை எண்ணும்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஊரிலே நடுத்தரக் குடும்பம். நல்ல நிலையில் இருந்துவந்த அந்தக் குடும்பம் ஏதோ சில காரணங்களால் வறுமையில் தள்ளப்பட்டது. அந்தக் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள். ஒருகுழந்தை நல்ல ஆரோக்கியமாகவும், இன்னொரு குழந்தை சவலைப்பிள்ளையாகவும் இருந்தன.

அந்தக் குடும்பத்தின் பொறுப்புள்ள தாய் என்ன செய்வார்? ஆரோக்கியமான குழந்தைக்கு வழக்கமான உணவும், சவலைப்பிள்ளைக்கு மருத்துவரின் அறிவுரைப்படி முட்டை முதலான உணவும் கொடுத்து, அந்தக் குழந்தையின் நோய் நீக்கி, ஆரோக்கியநிலைக்குக் கொண்டு வருவார்.

அதன் பின்னர் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவு, உடை போஷாக்கு செய்து கொடுப்பார்.

இந்தக் கதையில் உள்ள தாயும் அதுபோலவே செய்து வந்தார். பண்டிகை நாள் வந்தது. வறுமை காரணமாக வீட்டில் இனிப்புதிண்பண்டங்கள் எதுவும் செய்யாமல், ஆரோக்கியமான குழந்தைக்கு ஒரே ஒரு சாக்லெட்டை மட்டும் வாங்கிக் கொடுத்தார்.

கால ஓட்டத்தில் சவலைப் பிள்ளைக்கு ஆரோக்கியம் திரும்பியது. குடும்பத்தின் வறுமையும் ஒழிந்து வளமான நிலைக்கு வந்துவிட்டது. இப்போதும் பண்டிகை வந்தது. வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள், வீட்டிலேயே இனிப்புகள் தயார் செய்யப்பட்டன.

குழந்தைகளுக்கு புத்தாடைகள். புத்தாடை அணிந்து, வாயிலே இனிப்புடன் அந்த ஆரோக்கியக் குழந்தை தெருவிலே சென்றது.அதைப் பார்த்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பொறாமைக்காரன், அக்குழந்தையை கூப்பிட்டு ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே,ஒற்றைச் சாக்லெட்டுடன் நீ சுற்றித் திரிந்த காலம் ஞாபம் வருதே என்று பாடினானாம்.

அந்தக் குழந்தை அறிவுள்ள குழந்தை, அரசுப் பணியாளர் வீட்டுக் குழந்தை. (அரசு ஊழியர்கள் மீது அம்மாவுக்கு இவ்வளவுஅன்பு திடீர்னு வந்தது ஏனோ) இந்த பாட்டுக்கெல்லாம் அது ஏமாந்து விடாது என்பதை அந்த அசூயை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபையிலும், மாநகராட்சிக் கூட்டத்திலும் ஞாபகம் வருதே பாடலைப் பாடி அரசை திமுகவினர்விமர்சித்தது நினைவுகூறத்தக்கது. மொத்தத்தில் ஆட்டோகிராப் சேரனை விட இந்தப் பாடல் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான்ரொம்ப உதவியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+