அரசு ஊழியர்களுக்கு அள்ளு அள்ளு சலுகைகள்
சென்னை:
சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாநாட்டில் அவர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தார்முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு ஆதரவான சூர்யமூர்த்தி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாடுமற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொது மாநாடு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மைதானத்தில் நடந்தது.பல வகைகளிலும் (கட்டாயம் வர வேண்டும் என்பது உள்பட) தமிழகத்தில் இருந்து திரட்டி வரப்பட்ட அரசு ஊழியர்களின் இந்தமாநாடு தேர்தல் ஸ்பெஷல் அதிமுக மாநாடு போல நடந்தது.
இதில் ஜெயலலிதா அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தார். ஜெயலலிதா பேசுகையில்,
இந்த மாநாடு நடைபெறாது என்றும், நான் இதிலே கலந்து கொள்ள மாட்டேன் என்றும் சிலர் வதந்தி பரப்பினார்கள். அப்படிவதந்தி பரப்பியவர்கள் வெட்கித் தலை குனியும் வகையில், இன்று சீரோடும், சிறப்போடும் இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மாநில மாநாடு, அரசு ஊழியர், ஆசிரியர் மாநாடு என நடத்தப்படும் இந்த மாநாடு, நன்றிப் பேரணியுடன் (எதற்கு நன்றிஎன்பது கேள்விக்குறியான விஷயம்) நடத்தப்படும் மாநாடாக அமைந்து விட்டதில் அக மிக மகிழ்கிறேன்.
மக்களே நமது தெய்வங்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். மக்களுக்குச் செய்யும் பணியே நம் தொழில். எனவேதான்மக்களே நம் தெய்வங்கள். மக்கள் தொண்டு செய்யும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அப்படிப்பட்ட பேறு பெற்றபெருமக்களாக அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை நான் முதல்வராக இருந்தபோது அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை ஏதும்வைக்காமலேயே அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை உடனுக்குடன்செயல்படுத்தினேன்.
1996 முதல் 2001 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த முந்தைய அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகள்; திறமையற்ற நிதிநிர்வாக மேலாண்மை ஆகியவற்றின் காரணமாக 2001ல் நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதி நிலை அதலபாதாளத்தில் விழுந்து கிடந்தது.
தமிழக அரசே திவால் ஆகக்கூடிய நிலை. அரசுப் பணியாளர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கக் கூட நிதி இல்லை. இதனால்சலுகைகள் ரத்து என்ற கசப்பான மருந்தை நான் தர வேண்டியிருந்தது.
நிதி நிலை மேம்பட மேம்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயரும் வகையில், பல்வேறுசலுகைகளை படிப்படியாக எனது அரசு வழங்கியது என்று பேசிய முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பல்வேறு சலுகைகளைஅறிவித்தார்.
அந்த தேர்தல் ஸ்பெஷல் சலுகைகள் விவரம்:
- 7 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து ரொக்கமாக பெற்றுக் கொள்ளுவதை 15 நாட்கள் வரை சரண் செய்து ரொக்கமாகபெற்றுக் கொள்ளலாம்.
- ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவோர் தொகுப்பு ஊதியம் பெறும் காலம் 5 ஆண்டுகள் என்பதிலிருந்து 3 ஆண்டுகளாககுறைக்கப்படுகிறது.
- அரசு அலுவலர்கள் பணிக் காலத்தில் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதியாக இனிமேல் ரூ. 1.5 லட்சம் வழங்கப்படும்(தற்போது இது ரூ. 1 லட்சமாக உள்ளது).
- பணிக்காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், கருணை அடிப்படையிலான நியமனத்தின் மீதான தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்படும். (இந்தத் தடையை கொண்டு வந்தது அதிமுக அரசு தான்)
- வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணமாக பெறுவது 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
- 2003ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11,807 தற்காலிகப் பணியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்தனித் தேர்வு நடத்தி அதன் மூலம் பல்வேறு அமைச்சுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். (அதாவது பணி முழுமையாகநிரந்தரமாக்கப்படும்)
- கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு (வி.ஏ.ஒ) ஜமாபந்தி படி, ரூ. 1,700 ஆக உயர்த்தப்படும். அலுவலகத்தைப் பராமரிக்க ரூ.800ம், நிலையாண பயணப் படி ரூ. 200 ஆகவும் உயர்த்தப்படுகிறது. கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்வழங்கப்படும்.
- அரசு வானக ஓட்டுனர்களின் சலவைப்படி 30 ரூபாயிலிருந்து ரூ. 60 ஆக உயர்த்தப்படும்.
- 15 பணியாளர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் என்பது 12 பணியாளர்களுக்கு ஒரு உதவியாளர் என அனுமதிக்கப்படும்.
- ஊரக வளர்ச்சித் துறையில் சிறப்பு ஊராட்சிகள், நகராட்சிகள், பொதுப் பணித்துறையில் பணிபுரியும் துப்புறவுத்தொழிலாளர்கள், குடிநீர்த் திட்டப் பராமரிப்பு பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர்கள் தொகுப்பு ஊதியம்பெறுபவர்களுக்கு இனி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
- பல்வேறு துறைகளில் தினக்கூலியாக இருப்பவர்களின் பணி வரன்முறை செய்யப்படும்.
- அரசு அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு என தனி கழிப்பிட வசதிகள் ரூ. 3.5 கோடி செலவில் உடனடியாகஅமைக்கப்படும்.
சங்கங்களுக்கும் சலுகை:
இந்த சலுகைகள் தவிர அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களுக்கும் ஒரு சலுகையை முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகை பத்து மடங்கு உயர்த்தப்படும் என அவர்தெரிவித்தார். (இந்த சங்கங்களுக்குத் தரப்பட்ட அலுவலகங்களை இரு ஆண்டுகளுக்கு முன் கோட்டை வளாகத்தில் இருந்தேகாலி செய்தார் ஜெயலிலதா என்பது நினைவுகூறத்தக்கது).
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு தற்போது ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை மானியமாக அரசு வழங்கி வருவதுகுறிப்பிடத்தக்கது. இது பத்து மடங்காகிறது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளையும் வளைக்க முடியும்என அரசு கருதுகிறது.












Click it and Unblock the Notifications