பார்வர்ட் பிளாக் உடைந்தது-சந்தானத்துக்கு ஆப்பு
சென்னை:
நடிகர் கார்த்திக்குக்கும் அதிமுக ஆதரவாளரான சந்தானம் எம்எல்ஏவுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து அகில இந்தியபார்வர்ட் பிளாக் இரண்டாக உடைந்துள்ளது.
முன்னதாக கார்த்திக்கும் சந்தானமும் மதுரையில் போட்டிக் கூட்டம் நடத்தினர். கார்த்திக் தரப்புக்கே அதிகமான கூட்டம் வந்தது.இக் கூட்டத்தில் சந்தானத்தை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சந்தானத்தை கட்சியிலிருந்து நீக்கக்கோரி தேசியத் தலைவர் பிஸ்வாசுக்கு கார்த்திக் சிபாரிசுக் கடிதம் அனுப்பினார்.
இதை ஏற்றுக் கொண்ட பிஸ்வான், உங்களை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளார். இதற்கு ஒரு வாரத்தில் பதில் தர வேண்டும் என்று உத்தரவிடப்படுள்ளது.
சந்தானம் என்ன பதில் அனுப்பினாலும் கட்சியை விட்டு அவரை பேக்-அப் செய்ய தலைமை முடிவு செய்துவிட்டது.
அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என சந்தானம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், திமுகவுடன் தான் கூட்டணி என்றுபிஸ்வாஸ் முடிவு செய்துவிட்டார். பிஸ்வாசின் முடிவுக்குக் கட்டுப்பட கார்த்திக் முடிவெடுத்துள்ளார்.
முன்னதாக உசிலம்பட்டி சென்ற கார்த்திக் முன்னிலையில் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக்கட்சியுடன் இணைந்தது. அவரை உசிலம்பட்டி வர விடாமல் தடுக்க சந்தானம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications