அகதியாக வந்த புலிகள் ஆதரவாளர் கைது

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளரை போலீஸார் கைது செய்துசெங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பினர்.

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடந்த மாதம் 23ம் தேதி சிலர் அகதிகளாக வந்தனர். அவர்களில் மகேந்திரன் என்பவரும்ஒருவர். இவர் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு குழப்பமான முறையில் பதில் சொல்லியுள்ளார்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், வாலிபர் மகேந்திரன்,முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் நடத்தி வரும் தமிழீழ போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராகப் பணியாற்றியவர் என்றும்,துப்பாக்கி பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவரை செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர் மீதான தகவல்கள்உறுதியானால் மீண்டும் மகேந்திரன் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+