ஸ்டாலின் மகனுக்கு சீட் கேட்டு விண்ணப்பம்!!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் மகன் உதயநிதியை சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிடக் கோரிதிமுக தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 15ம் தேதிவரை விண்ணப்பங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களது தொகுதியில்போட்டியிடக் கோரி கட்சிப் பிரமுகர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

மறைந்த அமைச்சர் நாஞ்சில் மனோகரனின் உதவியாளர் சின்னி கிருஷ்ணன் என்பவர் கருணாநிதி திருவல்லிக்கேணியில்போட்டியிடக் கோரி மனு அளித்துள்ளார். இதே தொகுதியில் ஸ்டாலினுக்காகவும் அவர் விண்ணப்பம் அளித்துள்ளார்.

ஸ்டாலினின் மகன் உதயநிதிக்காகவும் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. பூங்கா நகர் தொகுதியில் உதயநிதிக்கு சீட் கோரிஅசோக் ஜெயின் என்பவர் விண்ணப்பம் அளித்துள்ளார். அதே தொகுதிக்கு ஸ்டாலினுக்கு சீட் கேட்டு தேவராஜன் என்பவர்விண்ணப்பம் தந்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதி, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் அழகிரிக்கு சீட் கேட்டு அவரது முக்கியஜால்ராக்களில் ஒருவரான பி.எம்.மன்னன் விண்ணப்பம் அளித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டு, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் வழங்கியுள்ளார். சிலகாலமாக உடல் நலமின்றி இருக்கும் சைதை கிட்டு தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளிலிருந்து திமுகவின் முன்னணித் தலைவர்கள் இம்முறை தொகுதி மாறிப் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக கருணாநிதி இம்முறை திருவல்லிக்கேணி தொகுதியில்போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.

அதேபோல அன்பழகன் துறைமுகம் தொகுதியிலிருந்து மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இத்தொகுதியில்86வாக்குகள் வித்தியாசத்தில்தான் அன்பழகன் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்ககது.

ஸ்டாலின் தொகுதி மாற மாட்டார், ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே நிறுத்தப்படுவார். அழகிரிக்கு இம்றை தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், ஸ்டாலின் மகனுக்கு சீட் கேட்டு விண்ணப்பம் வந்துள்ளதால் திமுகவில் இன்னொருவாரிசுக்கும் அடி போடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+