மர்மமாக எரிந்து நாசமான ஏசி ரயில் பெட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரம்பூர் ரயில்வே ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏசி ரயில் பெட்டி தீயில் எரிந்து கருகியது.திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த ஏசி ரயில் பெட்டி, வழக்கமான பழுதுபார்ப்புப் பணிகளுக்காக பெரம்பூர்ரயில் பெட்டித் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று அந்தப் பெட்டியில் திடீரென மர்மமான முறையில்தீப் பிடித்துக் கொண்டது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் அந்தப் பெட்டி முழுமையாக எரிந்துநாசமாகிவிட்டது. அந்த ஏசி பெட்டியில் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகமாகும்.
பெட்டிக்கு யாராவது வேண்டுமென்றே தீ வைத்தார்களா என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு ரயில்வேஉத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications