விஜயகாந்த்தின் வண்டவாளம்: ஆற்காடு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியைகடுமையாக விமர்சித்துப் பேசி வரும் விஜயகாந்த் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரது வண்டவாளங்கள்வெளியிடப்படும் என்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கடுமையாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்த ஒருவர்தற்போது கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூறி வருகிறார்.

தனது கூட்டங்களில் திமுக தலைவர் கருணாநதியைப் பற்றியும், திமு கழகம் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். இதுகடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நடிகர் தனது திருமணத்தையே கருணாநிதி முன்னிலையில்தான் நடத்திக் கொண்டார் என்பதும், கடந்தசட்டசபைத்தேர்தலுக்கு முன்பாக கருணாநிதிக்கு பாராட்டு விழாவை இவரே முன்னின்று நடத்தி வெள்ளிப் பேனா அளித்தார்என்பதும் வரலாறு.

இவர் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்தபோது, மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தவர் கருணாநிதிதான்.ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல தொடர்ந்து கருணாநிதியையும்,திமுகவையும் தரக்குறைவான வார்த்தைகளால் அந்த நடிகர் விமர்சித்துப் பேசி வருகிறார்.

கருணாநிதியை எதிர்த்து அரசியல் நடத்தினால்தான் தன் பெயர் நிலைக்கும் என்று கருதிக் கொண்டு அந்த நடிகர் அன்றாடம்மேடைகளில் விமர்சித்துப் பேசுவதை கருணாநிதி பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அவர் சாட்டுகிற குற்றச்சாட்டுகளுக்குபொறுப்புணர்வோடு பதிலளிக்க நாம் கடைமப்பட்டிருக்கிறோம்.

கருணாநிதி வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்த வேண்டும் என்று இவர் கூறுகிறார். கருணாநிதி ஒரு திறந்த புத்தகம்.வருமான வரி சோதனையை உண்மையில் இந்த நடிகரின் வீட்டில்தான் நடத்த வேண்டும். அந்த சோதனை பற்றி தேர்தலுக்குமுன்பு பொதுமக்களுக்குத் தெரிவித்தால் தமிழக மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

125 படங்களில் நடித்த இவர் எந்தப் படத்திற்கு எவ்வளவு கருப்புப் பணம், எவ்வளவு வெள்ளைப் பணம் வாங்கினார், அதன்வரவு செலவு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு அவர் விளக்கிக் கூற வேண்டும்.

இந்த நடிகர் எப்படி வேண்டுமானாலும் அரசியல் நடத்தி விட்டுப் போகட்டும். அதைப் பற்றி நமக்குக் கொஞ்சம் கூட கவலைஇல்லை. ஆனால் கருணாநிதியைப் பற்றி தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்தால், இவரது வண்டவாளங்கள் படிப்படியாகவெளிப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆற்காடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+