விமான நிலையத்தில் தப்பியோடிய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற வந்த வாலிபர் திடீரென அங்கிருந்து தப்பிஓடினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என போலீஸார் கூறுகின்றனர்.

கொழும்பு செல்லும் ஏர்-லங்கா விமானம் சென்னை விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும்பரிசோதனைக்குப் பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஒரு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது டிக்கெட்டை வாங்கிப் பார்த்தனர்.அது கொழும்பு வழியாக பிரான்ஸ் செல்வதற்கான டிக்கெட். சந்தேகம் தீராத நிலையில் அவரை இமிக்ரேஷன் அதிகாரிகளிடம்அழைத்துச் சென்றனர்.

அதிகாரிகள் அந்த வாலிபரின் விசா, பாஸ்போர்ட் போன்றவற்றைப் பரிசோதித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில்,திடீரென அந்த நபர் அங்கிருந்து ஓடினார். இதை எதிர்பார்க்காத அதிகாரிகளும், பாதுகாவலர்களும் அவரை துரத்தினர்.இருப்பினும் மின்னல் வேகத்தில் ஓடிய அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி விட்டார்.

அவரது பாஸ்போர்ட்டில் டி.பொன்னுச்சாமி, நாமக்கல் என்ற பெயர் இருந்தது.ஓடும்போது அவரது கையில்இருந்த பையும் கீழேவிழுந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸார், அதை தீவிரமாக சோதித்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் வந்து சோதித்துப்பார்த்தனர். அதில் வெடிபொருள் எதுவும் இல்லை.

தப்பி ஓடியவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லது போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராகஇருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் நாமக்கல்லுக்கும் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+