மும்பை போகிறார் ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிய பிறகு முதல் முறையாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் வரும் 12ம் தேதி ம்பைக்குசெல்கிறார்.
காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடாதிபதியாக பதவியேற்றதன் நூற்றாண்டு விழா மும்பையில் வரும்12ம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.இந்த விழாவில் ஜெயேந்திரர் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின்போது நவி மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய காமாட்சிஅம்மன் கோவிலையும் அவர் திறந்து வைக்கிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிய பிறகு தமிழகம், ஆந்திரா, புதுவையைத் தவிர வேறு எங்கும் ஜெயேந்திரர் செல்லவில்லை.இந் நிலையில் முதல் முறையாக அவர் வட மாநிலம் செல்கிறார்.












Click it and Unblock the Notifications