அதிமுகவில் நடிகர் முரளி: மன்சூரும் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Murali with Navya Nair&Prabhu in Pasakiligal

அதிமுகவில் நடிகர் முரளியும், அவரது மனைவி ஷோபாவும் இன்று இணைந்தனர்.

கார்த்திக், விஜய்காந்த் என யாரும் அதிமுகவுடன் கூட்டணிக்கு இதுவரை முன் வராததால் தனது பிரச்சாரத்துக்கு திரையுலகைச்சேர்ந்த நட்சத்திரங்களை அள்ளிக் குவிக்கும் வேலையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ளார்.

முதலில் காமெடியன் செந்தில், பின்னர் விஜயக்குமார் ஆகியோரை கட்சியில் இழுத்தனர். தற்போது முரளியையும், அவரதுமனைவி ஷோபாவையு அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.

இன்று காலை முரளியும் அவரது மனைவியும் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்துஅதிமுகவில் இணைந்தனர்.

அவர்கள் இருவருக்கும் அதிமுக அடிப்படை உறுப்பினருக்கான அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

தேர்தல் நெருங்க, நெருங்க அதிமுகவில் மேலும், பல நடிகர்களும் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பட்டியலில் முதலில் இணைய இருந்தவர் நடிகை குஷ்பு தான். ஆனால், கற்பு சர்ச்சையில் சிக்கி அவரது இமேஜ்காலியாகிவிட்டதால் அவரை சேர்ப்பது குறித்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இணைவுப் பட்டியலில் மேலும் பல நடிகர், நடிகைகளும் வரிசையில் உள்ளதாகத் தெரிகிறது. பலருக்கும் வலை வீசப்பட்டுவருகிறது. நடராஜனின் விழாக்களில் தவறாமல் ஆஜராகி வரும் நடிகை விந்தியாவும் அதிமுகவில் ஐக்கியமாகலாம் என்றுதெரிகிறது.

அதிமுகவுக்கு மன்சூர் ஆதரவு:

இதற்கிடையே, வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

அவ்வப்போது ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்தோ அல்லது சேராமலேயோ அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர் மன்சூர் அலிகான். முன்பு பாமகவில்இருந்தார். பின்னர் புதிய தமிழகத்திற்கு தாவினார்.

பின்னர் விஜய்காந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று குரல் கொடுத்து அவருடன் நின்றார். இப்போது கேப்டன் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் மன்சூர்தனியார் ஒரு ரூட்டில் போய்

அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடிக் காத்தில் அம்மிக் கல்லு, ஆட்டாங்கல்லே பறக்கிற அளவுக்கு அம்மாவின் ஆதரவு அலை நாடெங்கும்அடிக்கிறது. வருகிற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் புரட்சித் தலைவிதான் முதல்வர் ஆவார்.

மக்கள் எந்தக் குழப்பம் இல்லாமல், சாதிச் சண்டைகள் இல்லாமல், ரவுடி ராஜ்ஜியம் ஒழித்து, கந்து வட்டிக் கொடுமை அழிக்கப்பட்டு, மக்கள்கையில் காசும், பணமுமாய் சந்தோஷமாக வாழுகின்றனர்.

கோவில்களிலும், சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் ஏழை, பாளைகளுக்கு அன்னதானம் இட்டு, அகதிகளாய் வருபவர்களையும் இரு கரம் நீட்டி அரவணைத்துவந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தை வழி நடத்திச் செல்கிறார் அம்மா.

சில காரணங்களுக்காக நான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். அதிமுகவை விட்டு நான் எப்போதும் விலகவில்லை (அதுல எப்போ சேர்ந்தாரு). நண்டுகொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். அதுபோல ஆகி விட்டது எனது கதை.

எப்போதும் நான் அதிமுகவுக்கே ஆதரவாக இருப்பேன் என்று கூறியுள்ளார் மன்சூர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+