நுழைவுத் தேர்வு ரத்து: சிபிஎஸ்சி மாணவர் வழக்கு
சென்னை:
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் நிஷாந்த் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் டூ பயிலும்மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுனர் பர்னாலா ஒப்புதலும் அளித்து விட்டார்.இதன்படி தமிழக அரசுப் பாடத் திட்டம் அல்லாத (சிபிஎஸ்இ உள்ளிட்ட) பிற பாடத் திட்டங்களின் கீழ் பயிலும் பிற பிளஸ் டூமாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
இந் நிலையில் சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் பிளஸ் டூ படிக்கும் நிஷாந்த் என்ற மாணவர் நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்குதொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நிஷோந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, நுழைவுத் தேர்வு நடத்தித்தான் தொழில்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைமேற்கொள்ள வேண்டும். இதுதான் பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும்.
கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்து நுழைவுத் தேர்வுநடத்தியே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந் நிலையில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு ரத்து செய்ப்பட்டுள்ளது. இதுபாரபட்சமான முடிவாகும்.
அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதியே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்க்கப்படவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications