அரசு ஊழியர் மாநாட்டில் அதிமுக ஆதரவு பேச்சு: அதிகாரிகள் மீது தேர்தல் கமிஷன் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில், சங்க நிர்வாகிகள் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசியது குறித்துவிசாரிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் நடந்த அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு மற்றும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பொது மாநாட்டில் பேசிய சில சங்க நிர்வாகிகள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரஉறுதுணையாக இருப்போம், அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று பேசியதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன.

அவ்வாறு பேசியது யார், அவர்கள் உண்மையில் என்ன பேசினார்கள் என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்துவோம்.

தேர்தல் ஆணையர் கோபாலசாமி வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் இங்கே தங்கியிருந்து வாக்காளர் அடையாளஅட்டை வழங்கும் பணி குறித்து ஆய்வு நடத்துகிறார். வரும் தேர்தலில் வாக்காளர் அட்டையையே அதிகபட்சம் வாக்காளர்கள்பயன்படுத்த வேண்டும், பிற ஆவணங்களை காட்டுவதை அதிகபட்சம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம்உறுதியாக உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டைகள் தொடர்பாக எண்ணற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வாக்காளர் புகைப்பட அடையாளஅட்டையைப் பெறுவது, பழைய அட்டையை மாற்றுவது, தொலைந்த அட்டைக்குப் பதில் புதிய அட்டை பெறுவது தொடர்பாகபல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதுவரை அட்டை பெறாதவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக குறிப்பிட்ட இடத்துக்கு அழைக்கப்பட்டு ஆன்லைன் மூலம்வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மையங்களில் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் அட்டைவழங்கப்பட்டு விடும்.

ஏற்கனவே தரப்பட்ட அட்டையில் இருக்கும் பிழைகளைத் திருத்த விரும்பினாலோ அல்லது அட்டையைத்தொலைத்தவர்களுக்கு நகல் அட்டை வழங்க வேண்டியிருந்தாலோ, இணைப்பு மையங்கள் மூலம் இந்த நடவடிக்கைஎடுக்கப்படும். தொகுதிக்கு ஒரு இணைப்பு மையம் இதற்காக ஏற்படுத்தப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்தவர்கள் ரூ. 15 செலுத்தி, பழைய வாக்காளர் அடையாள அட்டையின்எண்ணுடன் புதிய அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். புகைப்படம், பெயர், முகவரி, வயது போன்றவற்றை இலவசமாகதிருத்திக் கொள்ளலாம். இந்த திருத்தங்கள் அனைத்தும் இணைப்பு மையங்களில் செய்யப்படும்.

அட்டையில் தவறான முகவரி இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஓட்டுப் போடும்போது வாக்காளரை அடையாளம் காணமட்டுமே இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதுவரை அடையாள அட்டை பெறாதவர்களுக்காக 001 படிவம் வீடு வீடாகசென்று வழங்கப்படும்.

அதில் அவர்கள் புகைப்படம் எடுக்க வேண்டிய மையம் குறித்த விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்துடன்சம்பந்தப்பட்ட மையங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சொந்த ஊரில் பணியாற்றுவோர்இடமாற்றம் செய்யப்படுவர். இது வழக்கமாக தேர்தல் நேரத்தில் பின்பற்றப்படும் நடவடிக்கைதான். நடுநிலை தவறாமல் தேர்தல்பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தல் பணியில் சம்பந்தப்படாதவர்களுக்கு இந்த இடமாற்றம் பொறுந்தாது.

தேர்தலில் சம்பந்தவர்களின் இடமாற்றம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே செய்யப்பட்டு விடும். தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பின்னர் எந்த இடமாற்றமும் இருக்காது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அரசு சார்பில் திட்டங்களை அறிவிப்பது, நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை வழங்குவதுதடை செய்யப்படும். இருப்பினும் சுனாமி உதவிகளை தொடரலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும் என்றார் நரேஷ் குப்தா.

மாநாட்டுப் பேச்சு: ஸ்டாலின் கோரிக்கை

இந் நிலையில் இன்று திருச்சி வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சென்னையில் நடந்த அரசு ஊழியர் மாநாட்டில்,அதிமுகவுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

திருச்சியில் மார்ச் 3ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 9வது திமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பானஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார்.

மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், சென்னையில் நடந்த அரசுஊழியர்கள் மாநிாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், அதிமுகவின் வெற்றிக்கு நாங்கள் துணை இருப்போம் என்று சிலர்பேசியுள்ளனர்.

அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசியுள்ளது நடத்தை விதிகளை மீறும் செயலாகும்.எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக கூட்டணியில்புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+