திமுகவுக்கு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவு?
சென்னை:
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த திமுகதலைவர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆகியவை நன்றிதெரிவித்துள்ளன.
இதனால் இந்த இரு அமைப்புகளும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப் போவது உறுதியாகியுள்ளது.திமுக தலைவரை முக்கிய இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் இருவர் நேரில் சந்தித்துப் பேசியதையும், முன்னதாக சசிகலாவின்கணவர் நடராஜனும், இரு அமைச்சர்களும் அவர்களிடம் பேசியதையும், அப்போது முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரகமிஷன் அமைக்க முதல்வர் ஜெயலலிதா தயாராக இருப்பதாக நடரஜான் உறுதியளித்து, அதிமுகவை ஆதரிக்கக் கோரியதையும்கூறியிருந்தோம்.
ஆனால், ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதை ஜெயலலிதா கண்டித்ததை நடராஜனுக்கு நினைவூட்டியதோடு,மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட அதிமுக அரசின் செயல்பாடுகளையும் நினைவூட்டிவிட்டு அவர்கள் திரும்பிவந்துவிட்டனர்.
இந் நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையான இட ஒதுக்கீட்டை கோரிக்கை நிறைவேற, எங்கள் வேண்டுகோளை ஏற்றுபிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கடிதம் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது.
இஸ்லாமிய மக்களின் பிரச்சனையை தனது சொந்தப் பிரச்சனையாகக் கருதி உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என கருணாநிதிதனது கடிதத்தில் கூறியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சிளிக்கிறது என்று கூறியுள்ளார்.
முமுக தலைவர் கடிதம்:
தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகளில் மிக பலமிக்கதான தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா,கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தங்களை நேரில் சந்தித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு தரும் அரசியல் சாசனத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். எங்கள் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து பிரதமருக்குகடிதம் எழுதியது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தம் சரியாண முறையில் கொண்டு வரப்பட்டு, இட ஒதுக்கீடு பெற்றுத் தரும் வரை தங்கள் முயற்சிகள் தொடரவேண்டும் என்று ஜவஹிருல்லா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications