அதிமுகவில் சீட் கேட்கும் தா.கியின் தங்கை!
சென்னை:
மதுரையில் திமுக கோஷ்டிப் பூசலில் சிக்கி படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் தங்கையும், அவரதுகணவரும் அதிமுகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி இதுவரை 9,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.இதில் இப்போதைய அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள், இப்போதைய எம்எல்.ஏக்களும் , மேலும் கட்சியின் முக்கிஸ்தர்களானகுண்டு கல்யாணம் போன்றவர்களும் அடக்கம்.இந் நிலையில் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் தங்கை வளர்மதியும், அவரது கணவர் ராஜேந்திரனும், சிவகங்கைதொகுதியில் போட்டியிட சீட் கோரி அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தா.கி. படுகொலைக்குப் பிறகு அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிமுகவுக்கு மாறி விட்டது. அவரது தம்பி அதிமுகவைஆதரித்துவிட்டு பின்னர் திமுகவை ஆதரித்தார். இப்போது அவர் எந்தப் பக்கம் என்று தெரியவில்லை.
இன்னும் சிவகங்கை பகுதியில் தா.கிக்கு அனுதாபம் இருப்பதால் தா.கி. குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிமுக தேர்தலில்போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று தெரிகிறது.
இதேபோல நத்தம் தொகுதியில் போட்டியிட விரும்பி அமைச்சர் விஸ்வநாதன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில்போட்டியிட விரும்பி அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோரும் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
இதேபோல ஸ்ரீரங்கம், போரூர், மதுராந்தகம், குடியாத்தம், ராணிப்பேட்டை, நாகர்கோவில், பள்ளிப்பட்டு, உடுமலைப்பேட்டை,ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட தற்போதைய அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட சமூக சேவகி சுஜாதாவுக்கு வாய்ப்பளிக்கக் கோரிஅத்தொகுதியைச் சேர்ந்த வைகை மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 80 பேர் ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர்.
அதிமுகவைப் போல திமுகவிலும் சீட் கேட்டு விண்ணப்பிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அண்ணாஅறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பிரமுகர்கள் குவிந்து விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர்.
இவர்களது வருகையால், அண்ணா சாலையில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுஅந்தப் பகுதியை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மறுபுறம், விஜயகாந்த் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பி தே.மு.தி.கவைச் சேர்ந்த ஏராளமானோர் கோயம்பேட்டில் உள்ளகட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தவண்ணம் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications