நான் சல்லியன்: வைகோ கூறிய மகாபாரத கதை
அருப்புக்கோட்டை:
மகாபாரதக் கதையைக் கூறி, அதிமுக கூட்டணிக்கு வாருங்கள் என்று தனக்கு அழைப்பு விட்ட அதிமுக அவைத் தலைவர்காளிமுத்துவுக்கு அதே மகாபாரதக் கதையைக் கூறி பதில் கொடுத்துள்ளார் வைகோ.
ஆனால், இந்தப் பதில் திமுகவுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதால், வைகோ விவகாரத்தில் பரபரப்பு இன்னும்அதிகரித்துள்ளது.சமீபத்தில் அதிமுக பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசுகையில், கெளரவர்களிடம் (திமுக) கர்னணாக இருக்காதீர்கள்,பாண்டவர்கள் (அதிமுக) பக்கம் வந்து அர்ஜூனனாக இருந்து பெருமை கொள்ளுங்கள் என்று வைகோவுக்கு அழைப்புவிடுத்தார்.
இன்னொரு கூட்டத்தில் பேசிய காளிமுத்து, லட்சுமணனாக இருக்க (அப்ப ராமர் யாரு.. ஜெயலலிதா தான்) அதிமுகவுக்குவாருங்கள் என்றும் வைகோவுக்கு கதவு திறந்தார்.
நேற்று அதிமுகவினரின் திருமண நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதாவோ, வந்தாரை வரவேற்பேன், வழிகாட்டி வாழ வைப்பேன்என்று அதிமுகவின் கதவுகளோடு, ஜன்னலையும் சேர்த்துத் திறந்தார்.
அதிமுக சார்பில் வைகோவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட அழைப்புகள் இவை.
இந் நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடந்த மாவட்ட மதிமுக செயலாளர் சண்முகசுந்தரம் குடும்ப திருமணநிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ, அதே மகாபாரதக் கதையிலிருந்து இன்னொரு நிகழ்வை எடுத்துச் சொல்லிகாளிமுத்துவுக்குப் பதில் (பதிலடி அல்ல) தந்தார்.
தனது பதிலில் திமுகவை மறைமுகமாக இடிக்கவும் செய்தார்.
வைகோ பேசுகையில், மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போதுபஞ்ச பாண்டவர்கள், தங்கள் தாய் மாமனான சல்லியனை, மாமன்தானே என்று அழைப்பு விடுக்காமல் விட்டு விட்டனர்.
சல்லியன் மனமுடைந்து போனான். இதைப் பயன்படுத்திக் கொண்ட துரியோதனன், முறையான அழைப்பு கொடுத்து, சல்லியனைசந்தித்து சிறப்பாக விருந்தோம்பல் செய்து உபசரித்தான். இதனால் மகிழ்ந்து போன சல்லியன், கெளரவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டான்.
போரில் தோல்வி அடைந்த பஞ்ச பாண்டவர்கள், நாடு, சொத்து, சுகம் அத்தனையையும் இழந்து தவித்தனர்.
எனவே, நம்மவர், நம்மவர் என்று கவனிக்காமல், முறையாக விருந்தோம்பல் செய்யாவிட்டால், எங்கு நல்ல உபசரிப்புகிடைக்கிறதோ அங்கு போய் விடுவார்கள் என்றார் வைகோ.
வைகோவின் இந்தப் பொடி பேச்சு, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பல செய்திகளை தெரிவிப்பதாகஅமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications