காவிரிக்கு சட்ட தீர்வு சாத்தியமில்லை-குமாரசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினைக்கு நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணவே முடியாது. பேச்சுவார்த்தை தான் இதற்கு சரியான தீர்வு என்றுகர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.புதுவையில் நடந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட குமாரசாமி காரைக்கால்சென்று சனி பகவான் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் சென்னை திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர்கிளம்பிச் சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண எனது அரசுதீவிரமாக முயற்சிக்கும். இப்பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமோ, சட்டப்பூர்வமாகவோ தீர்வு காண்பது சாத்தியம் இல்லாதது.
பேச்சவார்த்தை மூலம் மட்டுமே இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு காண முடியும் என்றார்.
போயஸ் கார்டனுக்கும் குமாரசாமிக்கும் மிக நல்ல நெருக்கம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications