முன்னாள் அமைச்சர் கே.ஏ.கே. மனைவி மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் மனைவி சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்குமுதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மாஜி சபாநாயகர் காளிமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தி கே.ஏ.கேவுக்கு ஆறுதல்கூறினர்.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் தொடர்ந்து 3 முறை அமைச்சராகவும், அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் முதலாவதுஅமைச்சரவையில் ஒருமுறை அமைச்சராகவும் இருந்தவர் கே.ஏ.கே.என அழைக்கப்படும் கே.ஏ.கிருஷ்ணசாமி.

நல்ல அரசியல்வாதி என்று பெயர் பெற்ற கே.ஏ.கே. பின்னர் தீவிர அரசியலிலிருந்து விலகி விட்டார். தற்போது எந்தவித அரசியல்தொடர்புகளும் இல்லாமல் வீட்டோடு இருந்து வருகிறார்.

கே.ஏ.கே.வின் மனைவி புனிதவதி. இவருக்கு 62 வயதாகிறது. சிறு நீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவர்மரணமடைந்தார்.

கோட்டூர்புரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கே.ஏ.கே.வின் வீட்டில் புனிதவதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரதுஉடலுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக அவைத் தலைவர் காளித்து உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி,கே.ஏ.கே.வுக்கு ஆறுதல் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+