அதிமுகவா, திமுகவா: உடைந்தது முஸ்லீம் லீக்
சென்னை:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனுக்கு எதிராக காயிதே மில்லத்தின் பேரனும், கட்சியின் மாநிலச்செயலாளருமான தாவூத் மியா கான் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் எனஅவர் கூறியுள்ளதால் கட்சி பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது.
காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கட்சித் தலைவர்காதர் மொய்தீன், திமுக சின்னத்தின் கீழ் போட்டியிட்டு எம்.பியானார்.இந் நிலையில் காதர் மொய்தீனுக்கு எதிராக காயிதே மில்லத்தின் பேரன் மியாகான் தலைமையில் சிலர் திரண்டுள்ளனர். இவர்கள்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக கூறியுள்ளனர்.
திருச்சியில், கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் ஜமால் ஹைதீன் தலைமையில் நடந்தது. அதில்மியாகானும் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் காதர் மொய்தீனுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காதர் மொய்தீன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து விட்டார். அதன்பிறகு உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுகவில் அடிப்படை உறுப்பினராக உள்ள அவர் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருப்பது சட்டவிரோதம், முஸ்லீம்மக்களுக்கு செய்யும் துரோகம். எனவே கட்சிக் கொடியை அவர் பயன்படுத்தக் கூடாது. திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்துகொண்டு கட்சியை அளிக்க அவர் முயலுகிறார் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மியா கான் கூறுகையில், நாங்கள் வரும் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைத்துப்போட்டியிடுவோம். திமுக தலைவர் கருணாநிதி, முஸ்லீம்களை கைவிட்டு விட்டார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications