அடுத்தவர் மனைவியை லபக்கிய காங் எம்எல்ஏ
சென்னை:
ரிஷிவந்தியம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான சிவராஜ் தனது மனைவியைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும்,மனைவியை மீட்டுத் தருமாறும் கோரி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த மூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு (ஹேபியஸ்கார்பஸ்) மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 1989ம் ஆண்டு எனக்கும், ஜெயந்திக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் எனக்கும், எனது தந்தை ராமுசெட்டியாருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது. ரூ. 1 கோடி மதிப்புள்ள இந்த சொத்து தகராறைத் தீர்த்து வைக்கரிஷிவந்தியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜை நான் நாடினேன்.
சொத்துப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ எனது மனைவியை கற்பழித்துவிட்டார். பின்னர் அவருக்கும்எனது மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. முதலில் இது எனக்குத் தெரியாது. இந் நிலையில் எங்களுக்கு2வது மகன் பிறந்தான்.
அவன் பிறந்த பிறகு ஒரு நாள் எனது மனைவி என்னிடம் வந்து கூறுகையில், நான் நாடி ஜோதிடம் பார்த்தேன். அதில், எனக்கும்பெரிய மனிதர் ஒருவரின் நட்பு கிடைத்து, அவருடன் வாழ்க்கை நடத்துவேன் என்று நாடி ஜோதிடர் கூறினார். எனவே நீங்கள்வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினாள்.
அதை நான் மறுத்து, அதெல்லாம் கட்டுக்கதை. அப்படியெல்லாம் நடக்காது என்றேன்.
அப்போதுதான் தனக்கும், எம்.எல்.ஏ.சிவராஜுக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு குறித்து எனது மனைவி என்னிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பின்னர் நான் சென்னைக்கு வந்து விட்டேன். இங்கு ஹோட்டல் ஒன்றில்மேற்பார்வையாளராக வேலை பார்த்தேன். சில மாதங்களுக்கு முன்பு நான் சொந்த ஊர் திரும்பினேன். அப்போது எனது மனைவிஅங்கு இல்லை.
மேலும், சந்தைப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தன்னையும், எம்.எல்.ஏவையும் சேர்த்து வைக்குமாறு கோரி மனுசெய்திருந்ததும், போலீஸில் என்னைப் பற்றி புகார் செய்திருந்ததும் எனக்குத் தெரிய வந்தது.
மேலும் எனது மனைவியை எம்.எல்.ஏ. ஆள் வைத்து கடத்திச் சென்று, தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்றும் எனக்குத்தெரிய வந்தது.இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் சந்தைப்பேட்டை காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன். முதலமைச்சரின்தனிப்பிரிவுக்கும், டிஜிபிக்கும் மனு அனுப்பினேன். இதுவரை அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனது மனைவி இப்போது எம்.எல்.ஏவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். அவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் மூர்த்தி கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்தநீதிபதிகள் இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர், டிஜிபி, சந்தைப்பேட்டை அனைத்து மகளில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்,சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர், எம்.எல்.ஏ. சிவராஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications