ஆந்திரா மீது உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு
சென்னை:
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்படும் எனத் தெரிகிறது.
சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டத்திட்டமிட்டுள்ளது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆந்திர அரசின்நடவடிக்கையால் கொந்தளித்துள்ளனர்.ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என முதல்வர்ஜெயலலிதா சமீபத்தில் சட்டசபையில் அறிவித்திருந்தார். வழக்கு தொடருவதற்கான ஆலோசனைகளில் பொதுப் பணித்துறைஉயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலாளர் பழனியப்பன் 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்றார்.அனேகமாக நாளை (திங்கள்கிழமை) வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மிக விரிவான அளவில் இப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு, ஆந்திர அரசின் திட்டத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள்எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை தமிழக அரசின் மனுவில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக தொடர்பான செய்திகள்பு தமிழகத்தின் சார்பில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களேபாலாறு தொடர்பான வழக்கின் மனுவையும் தயாரித்துள்ளனர்.
ஆற்று நீர் பிரச்சினை தொடர்பாக அண்டை மாநிலங்கள் மீது தமிழகம் தொடுக்கும் நான்காவது பெரிய வழக்காகும் இது. இதற்குமுன்பு காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் மீதும், முல்லைப் பெரியாறு, பவானி சாகர் ஆகிய அணைகள் தொடர்பாககேரளத்தின் மீதும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது ஆந்திரா மீதும் வழக்குப் பதிவாகவுள்ளது. மொத்தத்தில் தமிழகத்தைச் சுற்றியுள்ள 3 பெரிய மாநிலங்களும் தமிழகவிவசாயிகள், பொதுமக்களின் குடிநீர், விவசாய நீராதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
ஆம்பூரில் கடை அடைப்பு:
இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று முழுகடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் முழுவதும் வரும் 28ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆம்பூர்நகரில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது.
கடைகள் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை நிறுவனங்கள் என அனைத்து வணிக நிலையங்களும் மூடப்பட்டன. பல்வேறுகட்சியினர் கலந்து கொண்ட கண்டனப் பேரணியும் நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications