செல்போன் கோபுரத்தில் தற்கொலை நாடகம்
குலசேகரம்:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறிக் கொண்டு, கீழே குதித்துத் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய வாலிபரையும், அவரைக் காப்பாற்றப் போய் சிக்கிக் கொண்ட அவரது நண்பரையும் 3 மணி நேரம் போராடிதீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
குலசேகரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.உச்சிக்குச் சென்ற அவர் கீழே குதித்துத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். கீழே இறங்கி வருமாறு பாபுவுக்குவேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவர் இறங்கி வர மறுத்தார்.
இதையடுத்து பாபுவின் நண்பர் ஒருவர், தான் மேலே போய் பாபுவை மீட்டு வருவதாக தெரிவித்தார். சரியென்று அவரைதீயணைப்புத் துறையினர் மேலே அனுப்பினர்.
ஆனால் நண்பரை எச்சரித்த பாபு, மேலே வந்தால் உன்னையும் கீழே தள்ளி விட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதைப்பொருட்படுத்தாத பாபுவின் நண்பர் துணிந்து மேலே ஏறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பாபு, தனது நண்பர் மேலே வந்தவுடன், அவரையும் பிடித்து வைத்துக் கொண்டு கீழே தள்ளப்போவதாக மிரட்டினார். இதனால் அப் பகுதியில் பரபரப்பு அதிகரித்தது.
இந் நிலையில் செல்போன் கோபுரத்தின் மீது தீயணைப்புப் படை வீரர் ஒருவர் ஏறி பாபுவை சமாதானப்படுத்தி, கயிற்றின் மூலம்இருவரையும் மீட்டுக் கீழே கொண்டு வந்தார். கீழே கொண்டு வரப்பட்ட பாபுவை போலீஸார் கைது செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்த தற்கொலை நாடகம் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. தற்கொலை மிரட்டலுக்கான காரணம்உடனடியாகத் தெரியவிலலை. விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications