விஜய்காந்த் கட்அவுட்: ரசிகர்கள் செருப்பு மாலை
கோவை:
தேர்தல் பிரசாரத்திற்காக தங்களது ஊருக்கு நடிகர் விஜயகாந்த் வராததால், ஆத்திரமடைந்த அவரது ரசிகர்களும், தே.மு.தி.க.தொண்டர்களும் விஜயகாந்த்தின் கட்-அவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்து கோபத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்மன்றங்களும் கலைக்கப்பட்டன.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாகபிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து பேசுவதால் அடிக்கடி தொண்டை கட்டிக் கொண்டு அவதிப்படுகிறார் விஜயகாந்த்.இதனால் சில ஊர்களை அவர் தவிர்த்து விடுகிறார்.அத்தோடு ஆங்காங்கே கட்சியில் ஜாதிச் சண்டைகளும், கோஷ்டிச் சண்டைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் இந்தசண்டைப் பகுதிகளுக்குச் செல்லாமல் தனது பயணத்தை ரத்து செய்து வருகிறார்.
இந் நிலையில் கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், சனிக்கிழமை இரவு பொள்ளாச்சி அருகேஉள்ள திப்பம்பட்டி என்ற கிராமத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திப்பம்பட்டி கிராம பொது மக்களும், விஜயகாந்த் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் ஆவலோடு விஜயகாந்த்தைஎதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
கை காசைப் போட்டும், அங்கே இங்கே பணம் திரட்டியும் காலையில் இருந்தே மைக் செட் கட்டி, பகலிலேயே டியூப் லைட்,சீரியல் செட் எல்லாம் எரிய விட்டு ஜெகஜெகவென தலைவரின் வருக்ைககாகக் காத்திருந்தனர்.
ஆனால் திடீரென திப்பம்பட்டி நிகழ்ச்சியை விஜயகாந்த் ரத்து செய்து விட்டு நேராக உடுமலைப்பேட்டை போய் விட்டார்.இதனால் திப்பம்பட்டி பொது மக்களும், விஜயகாந்த் ரசிகர்களும் ஆத்திரமடைந்தனர்.
கட்சிக் கொடிகள், பேனர்கள், விஜயகாந்த்தின் கட்-அவுட் ஆகியவற்றை அடித்து அவர்கள் நொறுக்கினர். பின்னர் அவற்றைதீயிட்டுக் கொளுத்தினர். விஜயகாந்த்தின் கட் அவுட்டுக்கு சிலர் செருப்பு மாலையும் போட்டு தலைவர் மீதான தங்களதுமரியாதையை வெளிப்படுத்தினர்.
தங்களை மதிக்காமல் நடந்து கொண்ட விஜயகாந்த்தைக் கண்டித்து ஊரில் உள்ள ரசிகர் மன்றங்களைக் கலைத்து விடவும்ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்திற்கு விஜயகாந்த் போகாததால், ஆவேசமடைந்த ரசிகர்களும்,பொதுமக்களும் விஜயகாந்த் கட்சி கொடிகள், பேனர்களை கிழித்து, விஜயகாந்த்தின் கார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications