அதிமுக சீட் வேணுமா?- நாளையே கடைசி
சென்னை:
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்க புதன்கிழமையே கடைசி நாள் என்பதால் டிக்கெட் கேட்டு விண்ணப்பம் கொடுப்போரின் எண்ணிக்கை அலைமோதுகிறது.
அதிமுக சார்பில் தமிழகம், புதுவை மற்றும் கேரளம் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கடந்த 1ம் தேதி முதல் தலைமைக் கழக அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.முதல் நாளிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் சீட் கேட்டு விண்ணப்பங்களைக் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு சீட் கேட்டு மட்டும் 2,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட அனுமதி கோரி விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
இதுதவிர சமீபத்தில் கட்சியில் சேர்ந்துள்ள நடிகர்கள் செந்தில், ஆனந்தராஜ், ஏற்கனவே எம்.எல்.ஏவாக உள்ள நடிகர் ராதாரவி ஆகியோரும் சீட் கேட்டு மனு அளித்துள்ளனர்.
விண்ணப்பங்களை அளிக்க நாளையுடன் அவகாசம் முடிகிறது. இதனால் ஏராளமானோர் போட்டி போட்டு தங்களது விண்ணப்பங்களைக் கொடுத்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பங்கள் வழங்கியுள்ளோரின் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டி விட்டது. (ஒரு விண்ணப்பத்துக்கு டெலுத்தப்பட்டுள்ள கட்டணம் ரூ. 10,000, அப்ப வசூலை கணக்கு போடுங்க)
இன்று மயிலாப்பூரில் போட்டியிட தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியும், ஏற்கனவே அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவருமான டாக்டர் மைத்ரேயன் மனு அளித்தார். முன்னாள் அமைச்சர் அனந்தனும் மனு கொடுத்தார்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்பி நடிகர் ஜெயசூர்யகாந்த்ஜி (எந்தப் படம்?) என்பவர் மனு கொடுத்துள்ளார். தொடர்ந்து ஏராளமானோர் மனு அளித்து வருகின்றனர். மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை எப்படியும் 15,000த்தைத் தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் கட்சிகளிலேயே அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளது அதிமுகவுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications