கோவை குண்டு வெடிப்பு-சாட்சி விசாரணை ஓவர்
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சிகள் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாநகரில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா, கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 167 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் லியாசுர் ரஹ்மான் என்பவர் அப்ரூவர் ஆகியுள்ளார். தஸ்தகீர் என்பவர் இறந்து விட்டார். மற்றவர்கள் மீது கடந்த 2000மாவது ஆண்டு 16,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2000மாவது ஆண்டு ஜூன் 13ம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
அரசுத் தரப்பு சாட்சிகள் 2,600 பேரில் 1,312 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டதால் அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வந்தன.
இந்த சாட்சிகள் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. விரைவில் அனைத்து சாட்சிகளிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இறுதி விவாதம் நடத்திய பின்னர் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தொடர் வெடிகுண்டு வெடிப்பு நடந்து 8 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய தினமே சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications