காத்தவராயனும், காளிமுத்துவும்: கருணாநிதி
சென்னை:
காத்தவராயன், ஆர்யமாலா கதையைத் திரித்து காளிமுத்து புதுக் கதை புனைகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொடா சட்டம் என்ன, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டமா என்று கேட்டுள்ளார் காளிமுத்து.ஏதோ, வாஜ்பாய் அரசு இதைக் கொண்டு வராதது போலவும், மன்மோகன்சிங் அரசுதான் இதைக் கொண்டு வந்தது போலவும், இன்றைய மத்திய அரசு மீது மாசு தூவிடும் மாய்மாலத்தில் ஈடுபட்டுள்ளார் காளிமுத்து.
ஆர்யமாலாவை காத்தவராயன்தான் மீட்டெடுத்து வந்தான் என்று காளிமுத்து கூறியுள்ளார். இது தவறு. ஆர்யமாலாவை சிறையெடுத்ததே காத்தவராயன்தான். கதையைத் திரித்து புதுக் கதை புனைவது காளிமுத்துவுக்கு புதிதல்ல என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பிரச்சினை தீர்ப்பு குழு:
இதற்கிடையே தேர்தல் சமயத்தில் கட்சியினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபைத் தேர்தலையொட்டி ஆங்காங்கே மாவட்டங்களில் எழும் பிரச்சினைகள் குறித்து தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனிக்கவும், நான்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்புச் செயலாளர் விடுதலை விரும்பி, டெல்லி சம்பத், பெ.வீ.கல்யாணசுந்தரம், சிவப்பிரகாசம் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.
தேர்தல் தொடர்பான பிரச்சினைகள், விவரங்களுக்கு இக்குழுவை கட்சியினர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் அன்பழகன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications